twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4 நாடுகளைச் சேர்ந்த 4 வில்லன்கள் 3 ஜீனியஸ் படத்தில் கலக்கல்!

    By Mayura Akilan
    |

    மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தமிழ்படமான 3 ஜீனியஸ் படத்தில் நான்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு வில்லன்கள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிக்கும் 3 ஜீனியஸ் படத்தில் மிகமுக்கியமான விஞ்ஞானி வேடத்தில் இயக்குநர் கே.பாக்கியராஜ் நடித்துள்ளார்.

    இது முற்றிலும் மலேசியாவில் தயாரிக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் விஞ்ஞானத்தினாலும், அணுசக்தியினாலும் மக்களுக்கு என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

    அதி புத்திசாலி குழந்தைகள்

    அதி புத்திசாலி குழந்தைகள்

    மூன்று அதிபுத்திசாலிகளாக பிறக்கும் குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது 3 ஜீனியஸ்.

    விஞ்ஞானத்தின் நன்மைகள்

    விஞ்ஞானத்தின் நன்மைகள்

    அணுசக்தியால் ஏற்படும் நன்மைகள், நானோ தொழில்நுட்பம், போன்ற விஞ்ஞான தொழில்நுட்பங்களை மக்களுக்கு புரியும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.

    மலேசியா நடிகர்களின் பங்களிப்பு

    மலேசியா நடிகர்களின் பங்களிப்பு

    மலேசியாவைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் லண்டன் டான் பிரசன்னா, சசி, அபாஸ், அகோதரன், சங்கீதா, கவிதா, ஜஸ்பீர், ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    பாக்கியராஜ் விஞ்ஞானியாகிறார்

    பாக்கியராஜ் விஞ்ஞானியாகிறார்

    3 ஜீனியஸ் படத்தில் ஜீனியஸ்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் இயக்குநர் நடிகர் கே. பாக்கியராஜ்.

    4 நாடுகள் 4 வில்லன்கள்

    4 நாடுகள் 4 வில்லன்கள்

    பாகிஸ்தானிஸ் இருந்து யாஷின், சிங்கப்பூரில் இருந்து ஆனந்தராஜ், நைஜீரியாவில் இருந்து கிரீஷ், அரேபியாவில் இருந்து அலிபாய் ஆகியோர் இந்தப் படத்தில் வில்லன்களாக நடிக்கின்றனர்.

    மலேசியத் தமிழர்களுக்காக பி.கே. ராஜ்

    மலேசியத் தமிழர்களுக்காக பி.கே. ராஜ்

    3 ஜீனியஸ் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பி.கே. ராஜ், மகேஷ் கே. தேவ் ஒளிப்பதிவு செய்கிறார், ஆதிஷ் உத்ரியன் இசை அமைத்துள்ளார்.

    மலேசிய நடிகர்களின் நடிப்பில்...

    மலேசிய நடிகர்களின் நடிப்பில்...

    மலேசிய நாட்டில் சுமார் 20 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கென்று தனியாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் செயல்படுகிறது. தற்போது தனியாக மலேசிய தமிழ் கலைஞர்கள் பங்கேற்கும் திரைப்படங்கள் அங்கு உருவாகிறது.

    பிரபல இயக்குநர்களின் இயக்கத்தில்

    பிரபல இயக்குநர்களின் இயக்கத்தில்

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல இயக்குனர்கள் மலேசியாவில் படம் இயக்கிக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்கு இங்கு கொடுப்பதை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.

    ராம. நாராயணன் முதல் படம்

    ராம. நாராயணன் முதல் படம்

    இயக்குநர் ராம நாராயணன் ஏற்கெனவே ஒரு படம் இயக்கி விட்டார். தற்போது மற்றொரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். திருமலை, சஞ்சய்ராம், ரவிமரியா ஆகியோர் மலேசிய படங்களை இயக்க இருக்கிறார்கள்.

    பாக்கியராஜ் படம் இயக்குகிறார்.

    பாக்கியராஜ் படம் இயக்குகிறார்.

    தற்போது இந்த பட்டியலில் கே.பாக்யராஜும் இணைந்திருக்கிறார் விரைவில் மலேசிய திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக 3 ஜீனியஸ் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காமெடிக்கு பஞ்சமில்லை

    காமெடிக்கு பஞ்சமில்லை

    இது அறிவியல் தொடர்பான கதைதான் என்றாலும், ஆக்சன் காமெடிக்குப் பஞ்சமில்லை என்கிறார் இயக்குநர் பி.கே. ராஜ்.

    பள்ளி விடுமுறையில் வெளியாகிறது

    பள்ளி விடுமுறையில் வெளியாகிறது

    குழந்தைகளைக் கவரும் இந்த 3 ஜீனியஸ் படத்தில் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    English summary
    3 Genius is bilingual science-fiction movie, in Malay and Tamil that is produced by a company in Malaysia, is set to premiere in 160 cinemas in India this April, during the school holidays. The On Track Animation Sdn Bhd-produced film is an action, science fiction and comedy film about the relationships and careers of three Malaysian friends who all grew up in different backgrounds.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X