தனுஷிற்கு வரிசை கட்டும் 3 ஹீரோயின்கள்... மீண்டும் இணையும் தனுஷ் -அனிருத் ஜோடி
சென்னை : நடிகர் தனுஷ் கோலிவுட்டின் பிசியான நடிகராக உள்ளார். அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஐதராபாத்தில் டி43 படத்தின் சூட்டிங்கில் தனுஷ் பங்கேற்றுள்ளார்.
தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு 3 ஹீரோயின்கள்.

பிசியான நடிகர்
நடிகர் தனுஷ் கோலிவுட்டின் பிசியான நடிகர். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளிவந்த அசுரன், கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தி க்ரே மேன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஐதராபாத்தில் சூட்டிங்
இந்த சூட்டிங்கை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவர், கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். மாளவிகா மோகனன் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கை முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பவுள்ளார்.

தனுஷிற்கு 3 ஹீரோயின்கள்
இதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் படத்தில் தனுஷிற்கு 3 கதாநாயகிகள். பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் இதற்காக ஒப்பந்தமாகியுள்ளனர்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி
இதில் ஹன்சிகா ஏற்கனவே மாப்பிள்ளை படத்தில் தனுஷூடன் ஜோடி சேர்ந்துள்ள நிலையில் பிரியா பவானி ஷங்கர் மற்றும் நித்யா மேனன் முதல்முறையாக அவருடன் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் படத்தில் தனுஷ் மற்றும் அனிருத் ஜோடி நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர்.


Click it and Unblock the Notifications











