»   »  பொங்கல் ஸ்பெஷல்.... பைரவாவுடன் மோதும் படங்கள்.. ஒரு பார்வை!

பொங்கல் ஸ்பெஷல்.... பைரவாவுடன் மோதும் படங்கள்.. ஒரு பார்வை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாளை மறு நாள் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் பைரவா வெளியாகிறது. இந்தப் படத்துடன் மோத மேலும் ஒரு படம் தயாராகி வருகிறது.

ஆரம்பத்தில் பொங்கல் ஸ்பெஷலாக பைரவா மற்றும் 7 புதுப் படங்கள் வெளியாகவிருந்தன. செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, ஜிவி பிரகாஷின் புரூஸ்லீ போன்ற படங்கள் இந்தப் பட்டியலில் இருந்தன.


3 movies clashing with Bairava

ஆனால் திடீரென இந்தப் பட்டியலிலிருந்து பெரும்பாலான படங்கள் விலக, பைரவா, புரியாத புதிர், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


இந்த ரேசில் புதிதாக சேர்ந்துள்ளது இன்னொரு படம். அது சாயா. விஎஸ் பழனிவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சோனியா அகர்வால் போலீசாக நடித்துள்ளார். தயாரிப்பாளரும் இவர்தான்.


ஆக இந்த பொங்கல் வாரத்தில் பைரவாவுடன் புரியாத புதிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, சாயா படங்கள் மோதுகின்றன.


puriyatha puthir

இவற்றை விட முக்கியம், சிரஞ்சீவியின் மறுவருகைப் படமான கைதி நெம் 150. தமிழ்ப் படத்துக்கு நிகரான முக்கியத்துவத்துடன் நாளை வெளியாகிறது.

English summary
There are 3 new movies including Vijay Sethupathy's Puriyatha Puthir are clashing with Bairava on this Pongal Week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil