கிறிஸ்துமஸ் ரிலீஸ்: சமர் உள்பட 3 படங்கள் ரிலீஸ்

By Shankar

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக சமர் உள்பட 3 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. இவை தவி, இந்தி, ஆங்கிலப் படங்கள் வெளியாகின்றன. ஜாக்கி சான் படமும் இந்த நாளில் வெளியாகிறது.

சமர்

சமர்

விஷால், த்ரிஷா நடித்துள்ள படம் சமர். விறுவிறு ஆக்ஷன் ரொமான்டிக் படமான இதில் விஷாலும் த்ரிஷாவும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். தீராத விளையாட்டுப் பிள்ளை படம் இயக்கிய திரு, விஷாலை வைத்து இயக்கும் இரண்டாவது படம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 21 அல்லது 28-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கள்ளத் துப்பாக்கி

கள்ளத் துப்பாக்கி

விஜய்யின் துப்பாக்கிக்கு ஏக பூச்சாண்டி காட்டி, டமாலென பம்மிக் கொண்ட படம் இந்த கள்ளத் துப்பாக்கி. ரவிதேவன், முருகேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர். லோகியாஸ் இயக்கியுள்ளார். சிறுவர்கள் கையில் துப்பாக்கி கிடைப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது.

சட்டம் ஒரு இருட்டறை

சட்டம் ஒரு இருட்டறை

‘சட்டம் ஒரு இருட்டறை' படம் 21-ம் தேதியே வருகிறது. இந்த படத்தை சினேகா பிரிட்டோ இயக்கியுள்ளார். இது 32 ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் நடித்த பழைய படத்தின் ரீமேக் ஆகும். ரீமாசென், பிந்து மாதவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

தபாங் 2

தபாங் 2

சல்மான் கான் நடிப்பில் வந்து சக்கைப் போடுபோட்ட தபாங் படத்தின் இரண்டாம் பாகம் இந்தப் படம். பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளி வருகிறது. சென்னையில் 15 அரங்குகளில் வெளியாகிறது.

சைனீஸ் ஸோடியாக் அல்லது சிஇஸட் 12

சைனீஸ் ஸோடியாக் அல்லது சிஇஸட் 12

ஜாக்கி சான் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம். அவரது கடைசி ஆக்ஷன் படம். மிகப் பிரமாண்டமாகவும், காஸ்ட்லி தொழில்நுட்பத்திலும் உருவாகியுள்ள படம் இது.

தள்ளிப் போன பரதேசி

தள்ளிப் போன பரதேசி

பாலாவின் பரதேசி திரைப்படம் கிறிஸ்துமஸுக்கு வரவிருந்தது. ஆனால் இப்போது படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் தள்ளிப் போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X