இந்த மூணுதான் தீபாவளிப் படங்கள்!
சென்னை: இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக மூன்று படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
அவை விஜய் நடித்த மெர்சல், சரத்குமார் நடித்த சென்னையில் ஒரு நாள் 2 மற்றும் மேயாத மான்.

மெர்சல்
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஏகப்பட்ட தடைகள், பஞ்சாயத்துக்களைச் சந்தித்துள்ள இந்தப் படம், ஒருவழியாக நாளை வெளியாகிறது.

3300 அரங்குகள்
உலகெங்கும் 3300 அரங்குகளில் வெளியாகும் மெர்சலுக்கு, தமிழகத்தில் மட்டும் 600 ப்ளஸ் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து முதல் நிலை அரங்குகளும் மெர்சலுக்கே தரப்பட்டுள்ளன.

டிக்கெட் கட்டணம்
அரசு புதிதாக நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிருந்தாலும், அதை யாரும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. 1200 வரை விலை வைத்துள்ளனர்.

சென்னையில் ஒரு நாள் 2
சரத்குமார் நடிப்பில் ஜேபிஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சென்னையில் ஒரு நாள் 2. இந்தப் படம் 200 அரங்குகளில் நாளை வெளியாகிறது.

மேயாத மான்
பிரதீப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 150 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











