ஹீரோ, தம்பி படங்களுக்கு இனி கவலை இல்லை .. அடிச்சது ஜாக்பாட் !

சென்னை : டிசம்பர் 20ம் தேதி தமிழ் நாட்டில் மூன்று படங்கள் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி மற்றும் சல்மான் கானின் தபங் 3 டப்பிங். ஆனால், தமிழ் நாட்டில் முக்கால்வாசி திரையரங்குகளை ஆக்கிரமித்து இருப்பது ஹீரோ மற்றும் தம்பி தான் .

 3 new releases get good news

தற்போது சிட்டிசன் அமென்ட் பில் காரணமாக நாடு முழுவதும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகியவையும் அடுத்தடுத்து வருகிறது.

இந்த பிரச்சனைகள் ஏதும் பெரிதாகி விடகூடாது என்பதனால் தமிழக அரசு தொடர்ந்து பத்து நாளைக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது. தற்போதைய நிலையில் தான் இந்த மூன்று படங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த மூன்று படங்குழுவினரும் இந்த திடீர் விடுமுறைகளை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதனால் எதிர்பாராத மாணவர்கள் கூட்டமும் திரையரங்கில் இணைந்து கொள்ளும். இதனால் ,தற்போது வெளியாகியுள்ள படங்களின் வசூல் மும்மடங்கு உயர அதிக வாய்ப்பு உள்ளது.

 3 new releases get good news

நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக அசத்தி இருக்கும் படம் தான் ஹீரோ. படத்தை இரும்புதிரை இயக்குனரான பி.எஸ்.மித்ரன் இயக்கி இருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுடன், ரோபோ சங்கர், அர்ஜூன், அபய் தியோல் மற்றும் கல்யானி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். படத்தை கே.ஜ.ஆர் நிறுவனம் தயாரித்து இருக்கிறது .

மற்றொரு முனையில் அக்கா தம்பியின் பாசபிணைப்பில் கண்கலங்க வைத்து கொண்டிருக்கும் தம்பி. கார்த்தி ,ஜோதிகா ,சத்யராஜ் ,நிக்கிலா விமல் ,பாலா சிங்,நெடுமுடி வேனு ,இளவரசு,அம்மு அபிராமி,சவுக்கார் ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .படத்தை மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கிறார் .இவர் தமிழில் பாபநாசம் படத்தை இயக்கிய இயக்குனர் .

 3 new releases get good news

இந்த இரு தமிழ் படங்களுடன் மோதும் ஹிந்தி டப்பிங் படமான தபங் 3 .நடனபுயல் பிரபு தேவா இயகத்தில் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் த்ரில்லராக வெளியாகி இருக்கம் படம் தான் தபங் 3 .படத்தில் சல்மான் கான் ,ஷோனாக்சி சின்கா ,சுதீப்,சாயி மஞ்சரேக்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் .

தற்போது எந்த சிக்கல்களும் இல்லாமல் மூன்று படங்களும் வெளியாகி இருந்தாலும் படத்தின் வெற்றிக்கு வசூல் மிக அவசியம் அதை அள்ளி தரும் வகையில் நடந்திருக்கும் நிகழ்வு படக்குழுவை தாண்டி சினிமா வினியோகிஸ்தர்கள் முதல் திரையரங்கு உரிமையாளர்கள் வரை எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X