இந்த வாரம் மூணுதான்!

By Shankar

இந்த வாரம் மூன்று நேரடி தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆனால் காதலர் தின வாரமான இதில் இரு படங்கள் காதல் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வெள்ளிக்கிழமைகளில்தான் புதுப் படங்கள் ரிலீசாகும். ஆனால் இந்த வாரம் நேற்று வியாழக்கிழமை காதலர் தினம் என்பதால் அத்தனைப் படங்களையும் நேற்றே வெளியிட்டனர்.

ஆனால் இவற்றில் வனயுத்தம் மட்டும் நீதிமன்ற வழக்கு காரணமாக ஒரு நாள் தள்ளி இன்று வெளியாகிவிட்டது.

சில்லுனு ஒரு சந்திப்பு

சில்லுனு ஒரு சந்திப்பு

விமல் - ஒவியா - தீபா ஷா நடித்த காதல் கதை இந்த சில்லுன்னு ஒரு சந்திப்பு. பள்ளி நாட்களில் வருவது காதலே இல்லை. முதிர்ந்த வயதிலும் விவாகரத்து நியாயமே என்று கருத்து சொல்லும் படம் இது.

வனயுத்தம்

வனயுத்தம்

பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்ட படம். ஆனால் போலீஸ்காரர்களின் வாக்குமூலம் போல எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கிறது. வீரப்பன் மனைவி முத்துலட்சுமி போட்ட வழக்கிலிருந்து மீண்டு இன்று திரைக்கு வந்துள்ளது.

நேசம் நெசப்படுகிறதே..

நேசம் நெசப்படுகிறதே..

இந்தத் தலைப்பிலும் ஒரு படம் வெளியாகியுள்ளது. ராஜசூரியன் என்பவர் இயக்கியுள்ளார். வேந்தன் - அரசி என புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

ஏபிசிடி

ஏபிசிடி

ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் என்பதன் சுருக்கம்தான் இந்த ஏபிசிடி. பிரபு தேவா நடித்துள்ள முழு நீள நடனப்படம். இந்தியில் நேரடிப் படம். தமிழில் டப்பாகி 3 டியில் வெளியாகியுள்ளது. பல இடங்களில் விஸ்வரூபத்தைத் தூக்கிவிட்டு இந்தப் படத்தைப் போட்டுள்ளனர்.

ஹாலிவுட் படங்கள்...

ஹாலிவுட் படங்கள்...

இந்த வாரம் வெளியாகியுள்ள பெரிய ஹால்வுட் படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள, இந்தியாவில் படமாக்கப்பட்ட ஜீரோ டார்க் தர்ட்டி. ப்ளையிங் ஸ்வார்ட்ஸ் ஆப் ட்ராகன் கேட் என்ற படமும் இன்று வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X