குடியரசு தின விழா ஸ்பெஷல்... மூன்று புதிய படங்கள் ரிலீஸ்!

By Shankar

ஜில்லா மற்றும் வீரம் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் ஆதிக்கம் இன்னும் தொடரும் நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தையொட்டி மூன்று புதிய படங்கள் வெளியாகின்றன.

இந்த மூன்றுமே பெரிய அல்லது பிரபலமான நிறுவனங்களின் படங்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்தவை.

நேர் எதிர்

நேர் எதிர்

கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நேர் எதிர். ஜெயபிரதீப் இயக்கியுள்ளார். ரிச்சர்டு, வித்யா, ஐஸ்வர்யா நடித்துள்ள இந்தப் படம், ஒரு ஆக்ஷன் த்ரில்லர்.

கோலி சோடா

கோலி சோடா

பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கோலி சோடா, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரானது. கிஷோர், பாண்டி போன்றவர்கள் நடித்துள்ளனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு இது.

மாலினி 22 பாளையங்கோட்டை

மாலினி 22 பாளையங்கோட்டை

முழுக்க முழுக்க ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் இந்த மாலினி 22 பாளையங்கோட்டை (தலைப்பு உள்பட!). க்ரிஷ் சதுர், நித்யா மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீப்ரியா இயக்கியுள்ளார்.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

ஜில்லாவும் வீரமும் இன்னும் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளில் நன்றாகவே ஓடிக் கொண்டிருப்பதால், இந்தப் புதுப்படங்களுக்கு குறைந்த காட்சிகளையே ஒதுக்கியுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X