இப்போதும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகர் என்றால் அது வடிவேலுதான்.

மீறி யாராவது அவரை ஒப்பந்தம் செய்தாலும், அவர் வேண்டாம் என சிலர் மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் அமைதியாக ஒதுங்கிநிற்கும் வடிவேலு, தன் சொந்த ஊரில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார். கடந்த ஏழு மாதங்களாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
இப்போது முதல்முறையாக தனுஷ் படத்தில் அவர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குபவர் சிம்புதேவன். வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி தந்தவர்.
வடிவேலுவுடன் நடிப்பதில் ஏதும் தயக்கம் உண்டா என தனுஷிடம் இயக்குநர் கேட்டதற்கு, தாராளமாக நடிக்க வையுங்கள். எனக்கு அதில் மகிழ்ச்சியே என்றாராம் தனுஷ். விஷயம் கேள்விப்பட்டு தனுஷுக்கு வடிவேலு நன்றி கூறியதாகச் சொல்கிறார்கள்.
தனுஷின் ஆஸ்தான நகைச்சுவை நடிகர் விவேக். படிக்காதவன் படத்தில் வடிவேலுதான் நடிப்பதாக இருந்தது. சில பிரச்சினை காரணமாக அவர் விலகிவிட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











