விபச்சாரம்-ஜோதி, சாய்ராபானுவுக்கு நடிக்க தடை!

By Chakra

விபச்சார வழக்கில் சிக்கிய தெலுங்கு நடிகைகள் ஜோதி, சாய்ராபானுவுக்கு நடிக்க தடை வருகிறது

விபச்சார வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்துள்ள தெலுங்கு நடிகைகள் சாய்ராபானு, ஜோதி ஆகியோருக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நடிக்க தடை விதிக்கவுள்ளதாம்.

தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர்கள் சாய்ரா பானுவும், ஜோதியும். தமிழுக்கும் இவர்கள் சேவையாற்ற வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களை ஆந்திர போலீஸார் விபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பி ரகுபாபு, பரத்ராஜ் ஆகியோர் நைஜீரிய வாலிபரிடம் போதை பொருள் வாங்கி கையும் களவுமாக சிக்கிய போதுதான் இவ்விரு நடிகைகளும் பிடிபட்டனர்.

இதனால் தெலுங்கு பட உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.இவர்களின் கைது மற்றும் ரவி தேஜாவின் தம்பிகள் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து பல்வேறு நடிகைகளுக்கும் இந்தக் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

திரிஷா, காம்னா ஜெத்மலானி, சார்மி ஆகியோரின் செல்போன் நம்பர்கள் போதை பொருள் வழக்கில் கைதான நைஜீரிய வாலிபரின் மொபைலில் இருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இதனை திரிஷா உடனடியாக மறுத்து விட்டார். அதேசமயம், அவரது நண்பரான சிட்னி ஸ்லேடனின் எண் நைஜீரியக் கும்பலிடம் இருப்பதாக போலீஸார் கூறுவதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது சாய்ரா பானுவையும், ஜோதியையும் ஆந்திர நடிகர் சங்கம் தடை விதித்துள்ளது. தெலுங்கு பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விபசார வழக்கில் கைதான நடிகைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இவர்களால் தெலுங்குத் திரையுகின் பெயர் கெட்டுப் போய் விடும் என தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து அவர்களுக்குத் தடை விதிக்கப் போகிறது நடிகர் சங்கம்.

இருவருக்கும் எதிரான ஆதாரங்களை போலீஸாரிடம் கேட்டுள்ளோம். கிடைத்ததும் நடிக்கத் தடை விதிக்கப்படும் என சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் நடிகை புவனேஸ்வரி இப்படி விபச்சார வழக்கில் சிக்கியபோது அவர் மீது நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், போலி விசா வழக்கில் சிக்கிய நடிகை புளோரா மீது தடை விதித்து பின்னர் அதை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X