twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அன்புள்ள ரஜினிகாந்துக்கு ஹேப்பி பர்த்டே'... 'தேங்க்யூ கண்ணுங்களா!'

    By Shankar
    |

    விமானப் பயணத்தின் போது, தன்னுடன் பயணித்த 30 குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

    கும்பகோணத்தை அடுத்த அம்மாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் நேற்று முன்தினம் பெங்களூருக்கு விமானத்தில் சுற்றுலா சென்றனர்.

    அறிவியல் கண்காட்சியைப் சுற்றிப் பார்க்க அந்தப் பள்ளி இந்த விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. கிராமத்துக் குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு இது முதல் விமானப் பயண அனுபவம்.

    ஹை சூப்பர் ஸ்டார்

    ஹை சூப்பர் ஸ்டார்

    விமானத்தில் ஏறிய பிறகுதான், அதில் நடிகர் ரஜினிகாந்தும் பயணிப்பதை குழந்தைகள் அறிந்தனர். அவரைப் பார்த்ததும், "ஹை... சூப்பர் ஸ்டார்... சூப்பர் ஸ்டார்," என குதூகலித்தனர். ரஜினியும் குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பார்த்து புன்னகைத்தார்.

    நலம் விசாரித்தார்

    நலம் விசாரித்தார்

    அவர்கள் அனைவரும் ஓடிவந்து ரஜினியைச் சூழ்ந்து கொள்ள, அவரும் குழந்தைகளை ஒவ்வொருவராக அழைத்து, பெயர், படிக்கும் வகுப்பு, எப்படிப் படிக்கிறார்கள் என விசாரித்தார்.

    ஹேப்பி பர்த்டே

    ஹேப்பி பர்த்டே

    குழந்தைகள் அனைவரும் விமானத்திலேயே ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர். 'அன்புள்ள ரஜினிகாந்துக்கு ஹேப்பி பர்த்டே' என்று ஒருமித்த குரலில் குழந்தைகள் வாழ்த்த, அதை வணங்கி ஏற்றுக் கொண்டு, "தேங்க்யூ கண்ணுங்களா!" என்றார் ரஜினி.

    காத்திருந்த ரஜினி

    காத்திருந்த ரஜினி

    பின்னர் விமானத்திலிருந்து இறங்கியதும், அனைத்து குழந்தைகளும் வெளியில் வரும் வரை காத்திருப்போர் அறையில் காத்திருந்தார் ரஜினி. அனைத்துக் குழந்தைகளுடனும், ஆசிரியர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி.

    நல்லா படிங்க

    நல்லா படிங்க

    "நல்லா படிங்க. கவனத்தைச் சிதற விடாதீங்க. சிறந்த மாணவர்களாக நீங்க வரணம். பெற்றோரையும் பெரியோரையும் தாய் நாட்டையும் மதிச்சு நடங்க. ஆல்தி பெஸ்ட்," என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தார் ரஜினி.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    ஊர் திரும்பியதும் ரஜினியுடன் தாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் அவருடன் பேசியதையும் அனைவருடனும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர் அந்த சிறுவர்கள்.

    English summary
    30 school children have travelled along with Rajinikanth in a flight to Bangalore and advancely wished the actor for his birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X