ரஜினிகாந்த்தை பார்க்க வாட்ச்மேன் மறுப்பு - வீட்டின் முன் தீக்குளிக்க ரசிகர் முயற்சி

ரஜினிகாந்த்தின் வீடு போயஸ்தோட்டத்தில் உள்ளது. இங்கு இன்று ஒரு ரசிகர் வந்தார். வாட்ச்மேனை அணுகி தலைவரைப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் ரஜினி வீ்ட்டில் இல்லை என்று கூறியுள்ளார் வாட்ச்மேன். ஆனால் விடாத அந்த ரசிகர் கண்டிப்பாக நான் தலைவரைப் பார்த்தே ஆக வேண்டும் என பிடிவாதமாக கூறியுள்ளார்.
ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார் வாட்ச்மேன். இந்த நிலையில் தடீரென தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார் அந்த ரசிகர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பாய்ந்து அவரை தடுத்து நிறுத்தினர்.
போலீஸாருக்குத் தகவல் சென்று அவர்கள் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்துச் சென்றனர். அந்த ரசிகர் விருதுநகரைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.
Comments
arrest கைது சென்னை தமிழ்நாடு தீக்குளிப்பு முயற்சி ரஜினிகாந்த் விசிறி வீடு chennai fan house self immolation bid tamilnadu


Click it and Unblock the Notifications