தெலுங்கு கத்தியில் அரை மணி நேர காட்சிகளுக்கு கத்தரி!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து தீபாவளிக்கு வெளியான கத்தி படத்தின் தெலுங்குப் பதிப்பில் அரைமணி நேர காட்சிகள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தி படம் குறித்து பல தரப்பினரும், 'படத்தில் முன்பாதியில் தேவையில்லாத சீன்கள் இருப்பதாகவும் சற்று நீளமாக இருப்பதாகவும்' விமர்சித்தனர்.

படத்தின் நீளம் அதிகம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் தமிழில் எந்த மற்றமும் செய்யவில்லை.
தற்போது 'கத்தி' படத்தை தெலுங்கில் வரும் 21ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
தமிழ் ரசிகர்களின் விமர்சனங்களைத் தெரிந்து கொண்ட தெலுங்கு தயாரிப்பாளர்கள் படத்தின் முன் பாதியில் அரைமணி நேரக் காட்சிகளுக்கு கத்தரி போட்டு விட்டனராம் .
தெலுங்கில் வெளியாக உள்ள ‘கத்தி' படம் இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications