ஒளிப்பதிவாளர் ராஜ்ப்ரீத் மரணம்!
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளர் ராஜ்ப்ரீத் (59) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் வசித்து வந்த ஒளிப்பதிவாளர் ராஜ்ப்ரீத், திடீர் மாரடைப்பு காரணமாக சனிக்கிழமை காலை காலமானார்.
இவர் ஆராரோ ஆரிராரோ, புதிய பாதை, டேவிட் அங்கிள், ஹிந்தியில் ஆக்ரி ரஸ்தா உள்பட சுமார் 55-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். 10-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தற்போது கார்த்திகா மற்றும் புதுமுகம் விஜயன் நடித்து வரும் 'அலையோடு விளையாடு' என்ற படத்தைத் தயாரித்து வந்தார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகிறது.
மறைந்த ராஜ்ப்ரீத்துக்கு சுர்ஜித் கவுர் என்ற மனைவியும் அமன் என்ற மகன், மகள்கள் இந்தர்ப்ரீத், ஸ்ருதி ஆகியோரும் உள்ளனர். ராஜ்ப்ரீத்தின் இறுதிச் சடங்கு, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்தது.


Click it and Unblock the Notifications











