விபச்சாரம்-வினியோகஸ்தர், 2 துணை நடிகைகள் கைது

By Staff

சினிமா வினியோகஸ்தர் ஒருவர் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன இரு துணை நடிகைகளும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஆழ்வார்திருநகர் 1வது மெயின்ரோட்டில் உள்ள கோபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மோகன் ரெட்டி (43). சினிமா வினியோகஸ்தர் என்ற போர்வையில் விபச்சார ஏஜென்டாக இருந்து வந்தார்.

நடிகைகள், துணை நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தார். இவர் மீது 5 விபச்சார வழக்குகள் பதிவான நிலையிலும் கைதாகமல் தப்பி வந்தார்.

இந் நிலையில் சமீபத்தில் சென்னை வளசரவாக்கத்தில் விபசாரத்தில் ஈடுபட்டதாக 2 துணை நடிகைகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, மோகன் ரெட்டியின் வலது கரமான புரோக்கர் பாஸ்கர் பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து பாஸ்கரை வைத்து மோகன் ரெட்டியை மடக்க போலீசார் திட்டமிட்டனர்.

தனி போலீஸ் படையினர் மாறுவேடத்தில் தொழிலதிபர்கள் போல பாஸ்கரை அணுகினர். உல்லாசத்திற்கு நடிகைகள் வேண்டும் என்று கேட்டனர்.

ரூ.25,000 தந்துவிட்டு கோயம்பேடு பஸ் நிலையம் அருகே வந்தால் துணை நடிகையை அழைத்து செல்லலாம் என்றார் பாஸ்கர். இதையடுத்து அவரிடம் போலீசார் ரூ.25,000 தந்துவிட்டு கோயம்பேடு பஸ் நிலையம் அருகே அவர் சொன்ன இடத்தில் காத்திருந்தனர்.

அப்போது காரில் 2 துணை நடிகைகளை அழைத்துக் கொண்டு மோகன் ரெட்டியே அங்கு வந்தார். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் பாஸ்கரையும் கைது செய்தனர்.

கைதான இந்த துணை நடிகைகளின் பெயர் பத்மா, ஜோதி.

மோகன் ரெட்டி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்,

பிரபல தெலுங்கு நடிகரிடம் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு அதில் சினிமா பிரமுகர்களின் நட்பு கிடைத்தது. சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று தொடங்கினேன். படிப்படியாக சினிமா வினியோகஸ்தர் தொழிலை செய்ய ஆரம்பித்தேன்.

இதற்காக எம்.எம்.ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். கோவில், திருப்பதி, வாத்தியார், மாயாவி, ஜாம்பவான் போன்ற தமிழ் படங்களின் வினியோக உரிமையை வாங்கி ஆந்திராவில் திரையிட்டேன்.

வினியோகஸ்தர் தொழிலோடு மறைமுகமாக விபசார புரோக்கராகவும் செயல்பட்டேன். தெலுங்கு நடிகைகள், ஏராளமான துணை நடிகைகள் என்னோடு கூட்டணி வைத்திருந்தனர்.

சென்னையில் நான்கு வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசார தொழில் நடத்தி வந்தேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மோகன் ரெட்டியும், பாஸ்கரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான துணை நடிகைகள் இருவரும் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். துணை நடிகைகள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X