ஆல் தி பெஸ்ட்-தமிழக உரிமை பிவிஆருக்கு!

அஜய் தேவ்கன், சஞ்சய் தத், பிபாஷா பாசு, பர்தீன் கான், முக்தா கோட்சே ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஆல் தி பெஸ்ட். இப்படம் அக்டோபர் 16ம் தேதி திரைக்கு வருகிறது.
படம் முழுக்க காமெடிதானாம். அதாவது விலா எலும்பை முறிக்க வைக்கும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.
இந்தப் படத்தின் தமிழகம் மற்றும் மைசூர் விநியோக உரிமையை பிவிஆர் பிக்சர்ஸ் பெற்றுள்ளதாம். இதுகுறித்து விநியோகப் பிரிவு தலைவர் கெளரவ் வர்மா கூறுகையில், இதேபோல ப்ளூ படத்தின் டெல்லி, உ.பி., பஞ்சாப் விநியோக உரிமையும் எங்களுக்கேக் கிடைத்துள்ளது என்றார்.
பல்வேறு பெருநகரங்களில் திரையரங்க வளாகங்களை பிவிஆர் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
ajay devgan all the best அஜய் தேவ்கன் ஆல் தி பெஸ்ட் பிவிஆர் பிக்சர்ஸ் விநியோக உரிமை distribution rights pvr pictures


Click it and Unblock the Notifications