சீமானுடன் கைகோர்க்கும் எஸ்ஏசி!

இன்னொரு பக்கம், விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனின் அடுத்த படத்தின் ஹீரோவுக்கு நிகரான புரட்சிகரமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சீமான்.
இந்தப் படத்தின் பெயர் சட்டப்படி குற்றம் என்று முதலில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது அதை சட்டம் என்ன செய்யும் என்று மாற்றியுள்ளாராம் எஸ்ஏசி.
விஜய்- சீமான் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு முன்பே இந்தப் படத்தை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக சட்டத்தைச் சாடும் வசனங்களை அதிகமாக வைக்கும் எஸ்ஏசி, இந்தப் படத்தில் இப்போதைய சூழலில் தாங்கள் அனுபவிக்கும் சங்கடங்களை மனதில் கொண்டு அரசியலையும் ஒரு பிடிபிடிக்கப் போகிறாராம்.
அதற்கு தோதாக சீமானும் இருப்பதால், அரசியல் அனல் பறக்கும் இந்தப் படத்தில் என்கிறார்கள் ஏஸ்ஏ சந்திரசேகர் வட்டாரத்தில்.
சரி... படத்தில் விஜய் உண்டா? ஒரு காட்சியில் சீமானுடன் விஜய் தோன்றுவது போல திட்டமிட்டுள்ளனராம்!


Click it and Unblock the Notifications











