பிரச்சாரம்: ஷாருக் ரூட்டில் சல்மான்!

காங்கிரஸ் கட்சியின் தென்மாநில அலுவலகங்களில் கவர்ச்சி குறைவாக இருந்தாலும், வடக்கில் களைகட்டிவிட்டது தேர்தல் வேலைகள், கலர்புல் நட்சத்திரங்களுடன்.
நடிகர்கள் ஷாருக்கான், கோவிந்தா, நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, நக்மா ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யத் தயாராக உள்ளனர்.
மும்பை தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி.யான கோவிந்தா, நடிகை நக்மா ஆகியோர், கடந்த தேர்தல்களின் போதும் பிரசாரம் செய்தனர். இம்முறை அவர்களுடன் முன்னணி நடிகர் ஷாரூக்கானும் இணைகிறார்.
சல்மான்கான்!
இவர்களுடன் நடிகர் சல்மான்கானும் சேர ஆர்வம் காட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து கான்பூரை அடுத்துள்ள உன்னாவா தொகுதியில் சல்மான்கான் பிரசாரம் மேற்கொள்வார் என்று, அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அன்னு தாண்டன் நேற்று அறிவித்தார்.
சல்மான்கான் மேற்கொள்ளும் பிரசார நிகழ்ச்சிகளில் மற்ற நடிகர்களும் பங்கேற்பார்கள் என்றும், இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











