ரேணிகுண்டா படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை

மகேந்திரகுமார் ஜெயின் என்பவர் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள படம் ரேணிகுண்டா. இந்த படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் உத்தம்சந்த் எனும் பைனான்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் படத்தின் தயாரிப்பாளர் தன்னிடமிருந்து 37.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தாகவும், அதனை திருப்பித் தராததால் படத்தை வெளியிடக் கூடாது என்றும் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா டிசம்பர் 7ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், பதில் மனு தாக்கல் செய்யவும் படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்னொரு பைனான்சியரும் இதே படத்திற்கு இடைக்காலத் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, முந்தைய வழக்கின் உத்தரவே இதற்கும் பொருந்தும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











