ஸ்டீரியோவிஷனின் 'அர்ரி ஷாப்'
ஸ்டீரியோவிஷனின் 'அர்ரி ஷாப்': ஏவிஎம் சரவணன் திறந்து வைத்தார்!
இந்தியாவிலேயே முதல் முறையாக திரைப்படத்துறைக்குத் தேவையான அனைத்து வித தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் புதிய நிறுவனம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் புகழ்பெற்ற ARRI GB உதவியோடு துவங்கப்பட்டுள்ள இந்த புதிய நிறுவனத்துக்கு அர்ரி ஷாப் (ARRI SHOP) என்ற பெயர் சூட்டியுள்ளனர். ஸ்டீரியோ விஷன் நிறுவனம்தான் இதனை நடத்துகிறது.
இந்த நிறுவனத்தை தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் இன்று காலை துவக்கி வைத்தார்.
திரைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தைத் தருவதோடு, திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரைத் தொழில் நுட்ப வல்லுநர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், நவீன தொழில் நுட்பத்தையும் ஒரு கூரையின் கீழ் வழங்குவதுதான் இந்த நிறுவனத்தின் குறிக்கோள் என அர்ரி ஷாப் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
இங்கு வ்யூ ஃபைண்டர்ஸ், லைட்டிங் மீட்டர்ஸ், மேற்பார்வைக் கண்ணாடிகள், கேமரா உதிரி பாகங்கள், ஸ்ப்ளாஷ் ஹவுஸிங்க்ஸ், க்ளாஸ் மற்றும் ஜெல் பில்டர்ஸ், செட்டுக்குத் தேவையான பிற உபகரணங்கள் என அனைத்தும் இங்கு கிடைக்கும்.
உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் தரம் மிக்க தயாரிப்புகளை இங்கே தருவித்துத் நியாயமான விலையில் தருவோம் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
திரையுலகப் பிரபலங்கள் நடிகர் நகுல், தயாரிப்பாளர் எஸ்பிபி சரண், ஒளிப்பதிவாளர் சித்தார்த் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











