மாமனார் மரணம்: சபரிமலை பயணத்தை பாதியில் முடித்த சுரேஷ்கோபி

பிரபல மலையாள, தமிழ் நடிகர் சுரேஷ்கோபி சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். நேற்று மூணாறில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு தான் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்து முடித்தார். பின்பு சபரிமலை செல்வதற்காக அவசரமாகக் கிளம்பினார்.
உடன் தனது மகன்கள் கோகுல், மாதவ் ஆகிய 2 பேரையும் அழைத்துக் கொண்டு இருமுடி கட்டி பம்பை வந்தார்.
அவர் மலைமீது ஏறத் துவங்கியபோது, அவருடைய மாமனார் இறந்ததாக தகவல் கிடைத்தது. இதை அறிந்ததும் பாதியிலேயே தனது சபரிமலை பயணத்தை முடித்துக் கொண்டார். இருமுடி கட்டையும், மாலையையும் கழட்டி பம்பை போட்டுவிட்டு தனது 2 மகன்களுடன் ஆற்றில் குளித்து விட்டு ஊருக்கு திரும்பினார்.


Click it and Unblock the Notifications











