அதிர்ச்சி.. 30 வயது இளம் பாடகி பாத்ரூமில் மர்ம மரணம்.. பார்ட்டியில் என்ன நடந்தது?

சியோல்: தென் கொரியாவின் பிரபல பாப் பாடகி பார்க் போ ராம் மர்மமான முறையில் உயிரிழந்தது கே பாப் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரியாவில் தொடர்ந்து இளம் நடிகர்கள், பாடகர்கள் என பலரும் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.

பார்ட்டிக்கு சென்ற இடத்தில் அவர் உயிரிழந்தது ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அவரது மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

30 Year old K Pop Singer Park Bo Ram mystery death shocks fans


17 வயதில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த பார்க் போ ராம் உயிரிழந்தது கொரிய பாப் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

30 வயதில் மர்ம மரணம்: தனது இரு நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றுக்கு சென்ற நிலையில், இரவு 9.55 மணிக்கு பாத்ரூம் சென்ற அவர் திரும்பி வராத நிலையில், அவருடைய இரண்டு நண்பர்களும் பாத்ரூமுக்கு சென்று பார்த்த போது, மயங்கிய நிலையில், விழுந்துக் கிடந்ததை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கே சிபிஆர் சிகிச்சை எல்லாம் எடுத்துப் பார்த்தும் நடிகை பிழைக்காத நிலையில், அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. 30 வயதில் இளம் பாடகி எப்படி இறந்திருப்பார் என்கிற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

30 Year old K Pop Singer Park Bo Ram mystery death shocks fans

விசாரணை: பாப் பாடகி பார்க் போ ராம் மறைவு வருத்தமடைய செய்துள்ளதாக கே பாப் கலைஞர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி போலீஸார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினரை இந்த இக்கட்டான சூழ்நிலையில், யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என அவருடைய ஏஜென்சி கேட்டுக் கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி: ’Superstar K2' ரியாலிட்டி ஷோ மூலமாக தனது 17 வயதில் இளம் பாடகியாக அறிமுகமானவர் தான் பார்க் போ ராம். அந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்த நிலையில், தொடர்ந்து பாப் உலகில் பிரபல பாடகியாக வலம் வந்தார். ஆர்ட்டிஸ்ட் ஆஃப் தி அவார்ட் விருதை 2014ம் ஆண்டு கேயான் சார்ட் மியூசிக் விருதுகள் நிகழ்ச்சியில் வென்ற இவர் ஏகப்பட்ட விருதுகளை வென்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவரது மறைவு ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X