twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    30 இயர்ஸ் ஆப் வசந்திசம்.. 20 இயர்ஸ் ஆப் ரிதம்.. ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்ஸ்!

    |

    சென்னை : சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் இயக்குனர் வசந்த்-க்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இன்றளவும் இருந்து வருகிறது.

    இவரது திரைப்படங்கள் அனைத்தும் ஆரவாரமில்லாமல் கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாமல் எதார்த்தமான நடிப்புடன் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு உருவாக்குவதால் தனிச் சிறப்பை பெற்றுள்ளது.

    அவ்வாறு இவர் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகளை கடந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதியான இதே நாள் இவர் இயக்கிய ரிதம் திரைப்படம் வெளியாகி 20ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

    என்றும் இளமை மாறா...16 வயதினிலே வெளியாகி 43 ஆண்டு நிறைவு !என்றும் இளமை மாறா...16 வயதினிலே வெளியாகி 43 ஆண்டு நிறைவு !

    கேளடி கண்மணி

    கேளடி கண்மணி

    இயக்குனர் வசந்த் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் தோன்றுவது தரமான இயக்குனர் என்ற அடையாளமே அந்த அளவிற்கு தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து வசீகரித்து வரும் இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான " கேளடி கண்மணி" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத் துறைக்கு இயக்குனராக அறிமுகமானார்.

    அழகான திரைப்படங்களை

    அழகான திரைப்படங்களை

    கே பாலச்சந்தர் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் ஆரவாரமில்லாமல் கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாமல் எதார்த்தமான நடிப்புடன் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு அனைவரும் ரசிக்கும் வகையில் அழகான திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர் ஆவார்.

    சிவப்பு கம்பளம்

    சிவப்பு கம்பளம்

    கேளடி கண்மணி திரைப்படத்திற்குப்பின் நீ பாதி நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய இவரை தமிழ் ரசிகர்கள் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றனர்.

    ரிதம்

    ரிதம்

    இந்நிலையில் 2000ம் ஆண்டு அர்ஜுன், மீனா, ஜோதிகா நடிப்பில் வசந்த் இயக்கிய இந்த " ரிதம் " திரைப்படம் அனைவரின் இதயங்களையும் தொட்டு இன்று வரை அனைவரது ஃபேவரிட் திரைப்படமாக இருந்து வருகிறது.

    நதியே நதியே

    நதியே நதியே

    இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி "நதியே நதியே" பாடல் இன்று வரை அனைத்து இடங்களிலும் ஒலித்து கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பு வயதினரின் பேவரேட் பாடலாகவும் உள்ளது.

    20 இயர்ஸ் ஆப் ரிதம்

    20 இயர்ஸ் ஆப் ரிதம்

    இவ்வாறு தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் தனித்துவமானவராக இன்று வரை விளங்கி வரும் இயக்குனர் வசந்த் திரைத்துறையில் அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது மற்றும் இவர் இயக்கிய ரிதம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை கடந்து ரசிகர்களுக்கு பிடித்தமான திரைப்படமாக இருப்பதை தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் இதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    Read more about: vasanth வசந்த்
    English summary
    30 Years of Vasanth .. 20 Years of Rhythm .. Trending Hashtag !
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X