நடிகையுடன் ஜாலி - சிக்கிய தலைவர்!
கோடம்பாக்கத்தின் இன்றைய பரபரப்பு ஒரு இளம் தலைவரைப் பற்றித்தான். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவருடன் ஏடாகூடமான நிலையில் சிக்கி மீண்டுள்ளாராம்.
அந்த இளம் தலைவர் முக்கிய தேசியக் கட்சியில் இப்போதுதான் வளர ஆரம்பித்துள்ளார். பல வட்டங்கள் உள்ள அக்கட்சியில் இவர் தலைமையிலும் ஒரு வட்டம் உண்டு.
கிளிமாதிரி மனைவி இருந்தாலும்.... என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், ஒரு நாட்டியத் தாரகையை மனைவியாகப் பெற்ற அந்த இளம் தலைவருக்கு, 'நகை' நடிகையுடன் ஒரு நாளாவது பொழுதைக் கழித்துவிட வேண்டும் என தீராத ஆசை.
அதன் விளைவு தனது நட்புப் பரிவாரங்களை அழைத்து உடனே ஏற்பாட்டில் இறங்குமாறு ஆணையிட, அவர்களும் அங்கே இங்கே தொடர்பு கொண்டு நடிகையிடம் 'கால்ஷீட்' வாங்கி விட்டார்கள்.
தலைவருடனான அந்த சரித்திர சந்திப்புக்கு 'பூங்கா' மாதிரி ஒரு ஓட்டலையும் பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.
புன்னகையுடன் 'கருத்துப் பரிமாற்றம்' நடத்திக் கொண்டிருந்தபோது, மாநகர் போலீசார் கதவைத் தட்டி இருக்கிறார்கள். உள்ளே நுழைந்த போலீசாரிடம், உங்களுக்கு இங்கே என்ன வேலை... ஒரு கலை நிகழ்ச்சிக்காக இவரிடம் கலந்தாலோசனை செய்து கொண்டிருக்கிறேன் என தலைவர் கோபமாக கூறியுள்ளார்.
ஆனால் நமது போலீசாரிடம் பாச்சா பலிக்குமா... ஏற்கெனவே இவர் வருவது தெரிந்துதான் இங்கே வலை விரித்து காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். கலந்துரையாடலை கச்சிதமாக காமிராவிலும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
குட்டு வெளிப்பட்டதும், மேலிடத்துக்கு தகவல் தெரிவித்து இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு இளம் தலைவர் கெஞ்ச, வசமாகக் கிடைத்த ஒரு பிடிமானத்தை நழுவ விட விரும்பாத மேலிடம், வீடியோ சிடியை வாங்கி வைத்துக் கொண்டு எச்சரித்து அனுப்பி விடுமாறு காக்கிகளுக்கு அறிவுறுத்தியதாம்.
புன்னகையைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. இவர் இப்படிச் சிக்குவது இது முதல் முறையல்ல. பலமுறை இப்படி பல பிரபலங்களுடன் சிக்கி மீண்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது ஒரு முக்கிய தொழிலதிபரின் பிள்ளையுடன் சிக்கி மீண்டார். இப்போது இப்படி.
தனயனால் அவரது தந்தைக்கும் பெரும் தர்மசங்கடமாகி போய் விட்டதாம்.
--


Click it and Unblock the Notifications











