Don't Miss!
- Sports
அஸ்வின் ஆஸி. மண்டைக்குள்ள போய்ட்டாரு.. பங்கமாக கலாய்த்த வசீம் ஜாபர்.. பேட்ஸ்மேன்களுக்கு யோசனை
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூர்யாவைப் பார்க்கலாம்... ஆர்யாவைப் பார்க்கலாம்... மாணவிகளை கவர்ந்து வந்த விழாக் குழுவினர்
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த நம்பியார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளை அழைத்து வந்திருந்தனர் விழாக்குழுவினர்.
மாணவிகளை இரவு பத்துமணிவரைக்கும் விழா நடக்கும் இடத்தில் வைத்திருந்து விட்டு பாதுகாப்பு இன்றி திருப்பி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.
விடுதியில் தங்கிப் படிக்கும்மாணவிகளை இவ்வாறு அனுப்பிவைத்தது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

நம்பியார் திரைப்படம்
நடிகர் ஸ்ரீகாந்த் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள படம் நம்பியார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அந்த விழாவுக்கு 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்..

சூர்யா, ஆர்யா
நம்பியார் படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்கு சூர்யா, ஆர்யா, பவர்ஸ்டார் சீனிவாசன், விமல், ஜீவா போன்ற நட்சத்திரங்கள் உள்ளே வரும்போதெல்லாம் மாணவிகளின் கைதட்டலும் விசில் சத்தமும் காதைப் பிளந்தன.

விசில் போட்ட மாணவிகள்
மாலை 5 மணிக்கு தேவி தியேட்டருக்கு அழைத்து வரப்பட்ட அந்த மாணவிகள், 9.30 மணிக்கு விழா முடிவடையும் அங்கேயே இருந்தனர். சுமார் ஐந்து மணி நேரம் அங்கிருந்த மாணவிகளுக்கு ஒரு பெப்ஸியையும், ஒரு பப்ஸையும் கொடுத்து அனுப்பி வைத்தனர். விழாவிற்கு வந்த அவர்கள் எப்படி திரும்பிச்செல்வது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர்.

சூர்யாவைப் பார்க்கலாம்
சினிமா விழாவுக்கு கல்லூரி மாணவிகளை யார் கூட்டி வந்தார்கள்? என்று அங்கு வந்த மாணவிகள் சிலரிடம் கேட்டபோது, சூர்யாவைப் பாக்கலாம் வான்னு சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க என்று பல மாணவிகள் பதில் அளித்தனர்.

கல்லூரி விடுதி மாணவிகள்
அந்த மாணவிகள் அனைவருமே இரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள்! அதுமட்டுமல்ல, அக்கல்லூரிகளின் ஹாஸ்டல்களில் தங்கி படித்து வரும் மாணவிகள்! அதைவிட முக்கியமான விஷயம்... அவர்கள் அனைவருமே வெளியூரைச் சேர்ந்த ஏழை மாணவிகள்!

நடிகர்களைப் பார்க்க
ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் இந்த மாணவிகளை சினிமா நடிகர்களைக் காட்டுகிறோம் என்ற ஆசையைக் காட்டி இந்த விழாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

ஆசை வார்த்தைக்கூறி
ஒரு சினிமாவிழாவுக்கு 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை வரவழைக்க என்ன காரணம்? யார் இவர்களை ஏற்பாடு செய்தது? சூர்யாவைப் பாக்கலாம்...ஆர்யாவைப் பாக்கலாம்..சந்தானத்தைப் பாக்கலாம் என்றெல்லாம் மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளைக் காட்டி 300 கல்லூரி மாணவிகளையும் அழைத்து வந்திருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

என்ன நடவடிக்கை
கல்லூரியில் படிக்க அனுப்பிவைக்கப்பட்ட பெண் பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்களுக்குத் தெரியாமல், சினிமா விழாக்களுக்கு அனுப்பியவர்கள் மீது சம்மந்தப்பட் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?