மகளிர் மட்டும் ஸ்பெஷல்... மூன்று நாட்களில் 3000 பேருக்கு பட்டுச் சேலை!
சென்னை: மகளிர் மட்டும் கடந்த வெளிக்கிழமை வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மகளிர் மட்டும் வெளியான முதல் மூன்று நாட்களுக்குள் படம் பார்த்த 3000 பேருக்கு பட்டு சேலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு பெண்கள் தங்கள் தோழிகளை பேஸ்புக்கில் தேடி வருகிறார்கள். பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தங்கள் நண்பர்களை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தேடி வருகிறார்கள்.

அதே போல் மகளிர் மட்டும் போன்ற நல்ல படங்களை 2டி நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் கோரிக்கை வைத்தும் உள்ளனர்.

இந்த நிலையில் மகளிர் மட்டும் படத்தை திரையரங்குகளில் வந்து பார்த்த ரசிகைகளுக்கு 3000 பட்டுப் புடவைகளை 2டி நிறுவனம் பரிசளித்துள்ளது.

முன்னதாக படம் வெளியான நாளில், தியேட்டர்களில் வந்து படம் பார்க்கும் பெண் ரசிகைகளுக்காக தினசரி ஒரு பட்டுப்புடவை என்ற திட்டத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டது நினைவிருக்கலாம்.



Click it and Unblock the Notifications











