'எக்ஸ்டஸி'க்கு அனுஷ்கா...' ஓப்பிய'த்துக்கு த்ரிஷா.. இது போதையுலக கூத்து!
போதை மருந்து கும்பல் சினிமா உலகத்தோடு எந்த அளவு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதைக் காட்ட ஆந்திர போலீசார் அவிழ்த்துவிட்டிருக்கும் ஒரு மேட்டர் மகா ரகளையானது!
போதை மருந்து கும்பல் தங்களிடம் உள்ள போதை வஸ்துக்களை வெறுமனே ஓப்பியம், கோகைன் என்று கூறி விற்கவில்லையாம்.
அன்றைக்கு யாருடைய மார்க்கெட் ஹாட்டாக உள்ளதோ அந்த நடிகைகளின் பெயர்களைச் சூட்டி சுடச் சுட விற்று கோடிகளில் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த மாதிரி கிக்கான பெயர்களோடு தரப்படும் போதை சமாச்சாரத்துக்கு தொழிலதிபர்களிடம் ஏக கிராக்கியாம்.
எக்ஸ்டஸி என்ற போதைப் பொருளுக்கு ஆந்திரா - தமிழகத்தில் ஹாட் நாயகியாகக் கருதப்படும் அனுஷ்காவின் பெயரைச் சூட்டி விற்று வந்துள்ளது போதைக் கும்பல்.
இன்னொரு போதைப் பொருள் ஓப்பியத்துக்கு த்ரிஷாவின் பெயரைச் சூட்டி விற்பனை செய்துள்ளனர்.
கோக்கைன், அபின், ஹெராயின் என தங்களிடமிருந்த ஒவ்வொரு போதை வஸ்துவுக்கும் ஒரு நடிகையின் பெயரைச் சூட்டி விற்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மேலும் 8 நடிகர் நடிகைகளுக்கு இந்த போதை விவகாரத்தில் தொடர்பிருப்பதை ஆந்திர போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
விரைவில் சம்பந்தப்பட்ட அனைவரிடம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











