ட்விட்டரில் 'தம்பி' சிம்புவிடம் 'அண்ணன்' தனுஷ் என்ன கூறினார்?
சென்னை: நண்பேன்டா சிம்புவும், தனுஷும் ட்விட்டரில் 30 வயதை அடைவதை பற்றி பேசியுள்ளனர்.
சிம்பு தனது 30வது பிறந்தநாளை வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி கொண்டாடுகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்புவுக்கு இன்னும் சில நாட்களில் 30 வயதாகப் போகிறது.
இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

30 வயது
இன்னும் சில நாட்களில் எனக்கு 30 வயதாகப் போகிறது. நான் பதின் வயதில் இருந்தபோதில் இருந்தே முப்பது வயதை அடைய வேண்டும் என்று விரும்பினேன். இறுதியாக அதை அடையப் போகிறேன் என்று சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ்
சிம்புவின் ட்வீட்டை பார்த்த தனுஷ் பதிலுக்கு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வா தம்பி... இது ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என்று கூறியுள்ளார்.

வருகிறேன்
தன் ட்வீட்டுக்கு நண்பன் தனுஷ் பதில் அளித்துள்ளதை பார்த்த சிம்பு வருகிறேன், வருகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

ராதிகா
சிம்பு 30 வயதை அடையப் போகும் ட்வீட்டை பார்த்த நடிகை ராதிகா சரத்குமார், நல்லது தம்பி, முதிர்ச்சி அடை நீ ஒரு ராக் ஸ்டார் ஆவாய் என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











