நடிகர் கலாபவன் மணியின் அண்ணன் தீக்குளித்து சாவு

By Staff

மலையாள நடிகர் கலாபவன் மணியின் பெரியப்பா மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் திருச்சூர், சாலக்குடியைச் சேர்ந்தவர் வேலாயுதன். 51 வயதாகும் இவர் நடிகர் கலாபவன் மணியின் பெரியப்பா மகன் ஆவார்.

நேற்று முன்தினம் வேலாயுதனின் குடும்பத்தினர் வெளியில் போயிருந்தனர். அவர் மட்டும் தனியாக இருந்தார். வெளியில் போன குடும்பத்தினர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு திறக்கப்படவில்லை. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் வேலாயுதன் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அப்போது வேலாயுதன் தீயில் கருகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

வேலாயுதன் தற்கொலை செய்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X