கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால் பாக்யாஞ்சலி பொய்ப் புகார்-வேலு

நடிகை பாக்யாஞ்சலி கூறியுள்ள புகார்கள் குறித்து அவர் கூறுகையில்,
என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை பாக்கியாஞ்சலி மோசமானவர். என்னிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக அவர் கைப்பட எழுதிக் கொடுத்த பேப்பர் என்னிடம் உள்ளது.
கடந்த ஓராண்டாக இந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். இதனை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். கடனை திருப்பி தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இதனால் என் மீது பொய் புகார் கூறியுள்ளார்.
நான் அவரை விரட்டி விரட்டி காதலித்ததாகவும், திருமணம் செய்ய ஆசைப்பட்டு அறையில் பூட்டி முத்தம் கொடுத்ததாகவும் பாக்கியாஞ்சலி கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க கட்டுக்கதை. அவரிடமிருந்து ஒரு பையை பறித்துக் கொண்டு சென்றதாகவும் ரூ.15 லட்சம் நான் கடன் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இவ்வளவு பெரிய தொகை கடனாக கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் வசதியாகவில்லை.
உன்னை காதலிக்கிறேன் படத்துக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். நெல்லு படத்துக்கு ரூ. ஒன்றரை லட்சமும், கோட்டி படத்துக்கு ரூ.2 லட்சமும் சம்பளம் வாங்கியுள்ளார்.
ஆனால் கேரளாவில் ரூ.45 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளார். இது எப்படி முடிந்தது? அவரைப்பற்றி கேரளா பக்கம் போய் விசாரித்தால் நிறைய உண்மைகள் வெளிவரும். என்னை போல பலரிடம் கடன் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இந்த மாதிரி பெண்களை முட்டாள்தான் காதலித்து திருமணம் செய்வான். வளர்ந்து வரும் நடிகன் நான். எனது பெயரை கெடுப்பதற்காக திட்டமிட்டு பாக்கியாஞ்சலி இப்படி செயல்பட்டுள்ளார். இதனை நான் சட்டப்படி சந்திப்பேன். போலீஸ் விசாரணைக்கு உரிய நேரத்தில் செல்வேன். நான் எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று கூறியுள்ளார் வேலு.
இதற்கிடையே பாக்யாஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப் போகிறாராம் வேலு.


Click it and Unblock the Notifications











