அண்ணி தற்கொலை வழக்கு-கிரகலட்சுமியின் முன் ஜாமீன் கோரிக்கை தள்ளுபடி

By Sudha

Grahalakshmi
சென்னை: அண்ணி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகர் பிரஷாந்த்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

கிரகலட்சுமியின் அண்ணன் பொன்குமரன். இவரது மனைவி அபிராமி. பொன் குமரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கிடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அபிராமி தற்கொலை செய்து கொண்டார்.

அபிராமி தற்கொலைக்கு, தனது அண்ணன் நாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி, மைத்துனர் யுவகிருஷ்ணா ஆகியோர்தான் காரணம் என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார் பொன் குமரன். இதையடுத்து போலீஸார் நாகராஜன், யுவ கிருஷ்ணாவைக் கைது செய்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கையாக கிரகலட்சுமியும், அவரது தாயார் சிவகாம சுந்தரியும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் யாருக்கும் இந்த வழக்கில் முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இருவரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதேசமயம், நாகராஜனின் மனைவி ப்ரீத்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, யுவகிருஷ்ணா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு ஆகியவை விசாரணையில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X