ஸ்ரீவைகுண்டம் அருகே கார் விபத்து-மதன்பாப் காயம்!

நடிகர் தனுஷ் நடிக்கும் 'மாப்பிள்ளை' சினிமா படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.
நேற்று ஸ்ரீவைகு்ண்டம் அருகேயுள்ள போட்மாநகரம் என்ற பகுதியில் படப்பிடிப்பு நடக்க இருந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் மதன்பாப் ஒரு காரில் வந்து கொண்டிருந்தார்.
வேகமாக வந்த கார் ஸ்ரீவைகுண்டம்- வாகைக்குளம் பிரதான சாலையில் உள்ள ஒரு திருப்பத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதி்ல் மதன்பாப் பயணம் செய்த சொகுசு காரின் மேல் பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தி்ல் மதன்பாப் லேசான காயங்களுடன் தப்பினார். பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Comments


Click it and Unblock the Notifications