நில மோசடி சர்ச்சை-நடிகை ஸ்ரீபிரியா, கணவர் ராஜ்குமார் மறுப்பு

By Sudha

Sripriya
சென்னை: நில மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை மறுத்துள்ளனர் நடிகை ஸ்ரீப்ரியாவும் அவரது கணவர் ராஜ்குமாரும்.

நடிகை ஸ்ரீபிரியா கணவரும் நடிகருமான ராஜ்குமார் மீது காஞ்சீபுரம் மாவட்டம் கோவளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலமோசடி புகார் தொடர்ந்துள்ளார்.

அதில், "தனது தந்தைக்கு திருப்போரூரில் சொந்தமாக உள்ள 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ராஜ்குமார் அபகரித்துக் கொண்டதாகக்" குறிப்பிட்டிருந்தார் ரஞ்சன்.

இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. ரஞ்சன் புகார் தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ரஞ்சன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு நடிகை ஸ்ரீபிரியாவும் அவரது கணவர் ராஜ்குமாரும் இன்று சென்னையில் நிருபர்களிடம் விளக்கம் அளித்தனர்.

அவர்கள் கூறுகையில், "காஞ்சீபுரம் மாவட்டம் படூர் கிராமத்தில் 1989-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை பலரிடம் இருந்து சட்டப்படி 24 ஏக்கர் நிலங்களை நாங்கள் வாங்கினோம். அவை மொத்தம் 160 பத்திரங்களைக் கொண்டது. எங்கள் மீது புகார் கூறியுள்ள ரஞ்சன் என்பவரின் தந்தை அர்ஜுனிடம் இருந்து 30 சென்ட் நிலம் அதில் வாங்கப்பட்டது. அந்த நிலத்தை அவர் சொந்த சம்பாத்தியத்தில் பாளையம் என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார். 1979-ல் இதற்கான பத்திரப்பதிவு நடந்துள்ளது.

பண நெருக்கடி காரணமாக அர்ஜுனன், அந்த 30 சென்ட் நிலத்தை எங்களிடம் விற்பனை செய்தார். அந்த இடத்தை வாங்கியது முதல் இந்த ஆண்டு வரை கிஸ்தி மற்றும் அனைத்து வரிகளையும் ராஜ்குமார் சேதுபதி பெயரில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த 30 சென்ட் நிலத்துடன் 2004-ம் ஆண்டு வரை வாங்கப்பட்ட அனைத்து நிலங்களையும் சீர் செய்து லே-அவுட் போட்டு, பட்டாக்கள் மாற்றி விற்பனை செய்யப்பட்டன. 30 சென்ட் நிலத்தை விற்ற அர்ஜூன் 2009-ல் காலமானார். அவர் வாழ்ந்த காலம் வரை அந்த நிலத்தை ராஜ்குமார் மோசடி செய்து அபகரித்ததாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. அவர் வாழ்ந்த போது, அந்த நிலத்தில் ரோடுகள் போடப்பட்டன. நிலம் சீர் செய்யப்பட்டது.

அப்போதெல்லாம் ரஞ்சன் எந்தவித எதிர்ப்பும் சொல்லவில்லை. அர்ஜூன் மறைவுக்கு பிறகு ரஞ்சன் திடீரென எங்கள் மீது குற்றம் சாட்டுவதில் உள்நோக்கம் இருக்கிறது. நாங்கள் நேர்மையாக கடந்த 25 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறோம்.

இது வரை எங்கள் மீது எந்த புகாரும் வந்தது இல்லை. ரஞ்சன் குறிப்பிட்டுள்ள 30 சென்ட் நிலத்தை சுற்றி 24 ஏக்கர் நிலம் வாங்கி அவற்றை மேம்படுத்தி விற்று இருக்கிறோம். யாரும், எந்த குறையோ, புகாரோ சொல்லவில்லை. ரஞ்சன் மட்டும் எங்கள் மீது களங்கம் கற்பிக்கிறார். இவரது தந்தை சொத்துக்களை விற்றபோதே ரஞ்சனிடம் கையெழுத்தும் வாங்கி இருக்கிறோம்.

இந்த சொத்தை நாங்கள் ரூ.11/2 லட்சத்துக்குதான் விற்றோம். இப்போது அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. எங்களிடம் உள்ள ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்துள்ளோம். ரஞ்சன் எங்கள் மீது சுமத்தி இருப்பது பொய் புகார். எனவே அதை சட்டப்படி சந்திப்போம்..." என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X