போலீஸ் வேடத்தில் நடித்த நடிகை விபச்சார வழக்கில் கைது!!
பெண்களை விபச்சாரத்தில் தள்ளியதாக கெளரி என்ற டிவி நடிகை கைது செய்யப்பட்டார். இவர் கோலங்கள் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர். இந்தத் தொடரில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்பது ஹைலைட்!.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 'சுஜாதா அபார்ட்மெண்ட்ஸில்' உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் ஜெகபர்சாலி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் தனிப்படை போலீசார் அந்த சொகுசு வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 'வாடிக்கையாளர்களுடன்' விபசாரத்தில் ஈடுபட்டிருந்த மீனா, ராதிகா ஆகிய இளம் பெண்கள் மீட்கப்பட்டார்கள். அவர்களை விபசாரத்தில் தள்ளியதாக டி.வி. நடிகை கெளரி (28) மற்றும் புரோக்கர் மாசிலாமணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கெளரி மீது ஏற்கெனவே விபச்சார வழக்குகள் உள்ளதாகத் தெரிகிறது. இருமுறை போலீஸ் பிடியிலிருந்து தப்பியுள்ளார்.
பறவைகள் பலவிதம், மூன்று நாட்கள், காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











