twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    23 ஆண்டுகள் ஆச்சு...இத அடிச்சுக்க ஆளில்லை...எவர்க்ரீன் கரகாட்டக்காரன்

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் என்றாலும் சரி, எவர்க்ரீன் காமெடி என்றாலும் சரி உடனே நினைவுக்கு வரும் படம் கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் தான். இந்த படம் ரிலீசாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

    ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, காந்திமணி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். காமெடி, பாடல், இசை என பலவற்றிலும் தாறுமாறு ஹிட் அடித்து, வசூலை அள்ளி குவித்த படமும் இது தான்.

    8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்! 8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்!

    இந்நிலையில் இந்த படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இந்த படத்தின் டைரக்டர் கங்கை அமரன் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

    தில்லானா மோகனாம்பாள் தான் காரணம்

    தில்லானா மோகனாம்பாள் தான் காரணம்

    கங்கை அமரன் கூறுகையில், இந்த படம் எடுப்பதற்கு முக்கிய தூண்டுதலாக அமைந்தது தில்லானா மோகனாம்பாள் படம் தான். நாதஸ்வர வித்வானுக்கும், நாட்டிய கலைஞருக்கும் இடையேயான காதல் தான் அந்த படம். ஆனால் ஹீரோ - ஹீரோயின் இருவரையும் நடன கலைஞர்களாக வைத்து இந்த படத்தை எடுக்க நினைத்தேன். அதற்கு கரகாட்டம் தான் சரியாக இருக்கும் என தோன்றியது. அந்த படத்தில் யாருக்கும் தெரியாமல் சிவாஜி சார், பத்மினி அம்மாவை சென்று பார்ப்பார். அந்த காட்சியை அப்படியே உல்டாவாக எடுத்தது தான் ஊரு விட்டு ஊரு வந்து பாடல்.

    பாராட்டை பெற்ற டைட்டில்

    பாராட்டை பெற்ற டைட்டில்

    படம் பூஜை போட்டது முதலே படத்தின் டைட்டில் பெரும் பாராட்டை பெற்றது. நான் எப்போதும் அண்ணன் இளையராஜாவை தான் முதல் பாடலை பாட சொல்வேன். அது ராசியாகவும் இருக்கும். அப்படி தான் டைட்டிலேயே சேர்க்க வேண்டும் என்பதற்காக பூஜையை வீடியோவாக எடுத்து படத்தில் சேர்த்தோம்.

    ஒன்லி சாய்ஸ் ராமராஜன்

    ஒன்லி சாய்ஸ் ராமராஜன்

    ஏற்கனவே எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தை ராமராஜனை வைத்து எடுத்தோம். இதுவும் கிராமத்து கதை என்பதால் எங்களின் முதல் தேர்வும், ஒரே தேர்வும் ராமராஜன் தான். வேறு எந்த ஹீரோவையும் நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    கனகாவை தேர்வு செய்தது இவரா

    கனகாவை தேர்வு செய்தது இவரா

    ஹீரோயினுக்கு ரோலுக்கு தேவிகாவின் மகள் கனகாவை பரிந்துரை செய்தது கங்கை அமரனின் மனைவி தானாம். தேவிகா நடித்துக் கொண்டிருக்கும் போதே கனகா நடனம் பயின்று வந்துள்ளார். இதனால் மேக்அப் டெஸ்டிற்கு வர முடியுமா என கனகாவை கேட்டுள்ளனர். இவர் சரியாக இருப்பார் என முடிவு செய்து தான், கனகாவை நடிகையாக அறிமுகம் செய்வதற்காக தேவிகா, கனகாவின் நெற்றியில் பொட்டு வைப்பது போல் அறிமுக சீனை வைத்துள்ளனர்.

    வாழைப்பழ காமெடி வந்த கதை

    வாழைப்பழ காமெடி வந்த கதை

    மலையாள படம் ஒன்றில் வந்த சீனை மாற்றி, டெவலப் செய்து உருவானது தான் வாழைப்பழ காமெடி. அதை பல விதங்களில் பலமுறை சொல்லிப் பார்த்து தான் இந்த சீனை உருவாக்கினோம். செந்திலின் கேரக்டரை அழுத்தமாக கொண்டு வர வைக்கப்பட்டதே வெற்றிலை பாக்கு காமெடி.

    கரகம் இப்படி தான் நின்றதா

    கரகம் இப்படி தான் நின்றதா

    கரகம் செம்பிற்கு கீழ் 3 இரும்பு தகடுகளை வைத்து பொறுத்தி இருந்தோம். நடிகர், நடிகைகள் தலையில் இருந்து கரகம் நழுவி விடாமல் இருக்க இந்த ஏற்பாட்டை செய்தோம். ராமராஜன், கனகா இருவருக்கும் இதை செய்தோம். அதன் மேல் கரகம் வைத்ததால் நாங்கள் என்ன செய்தோம் என யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

     சொப்பணசுந்தரி கார் வந்தது எப்படி

    சொப்பணசுந்தரி கார் வந்தது எப்படி


    1958 மாடல் பழைய கார் ஒன்றை ஹீரோ குரூப் வைத்திருப்பது போன்ற காட்சியை ஏற்கனவே வைத்து தான், பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் சீனை எடுத்தோம். அந்த காரை மீண்டும் பயன்படுத்துவதற்காக, அந்த காரை வேறு யாரிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டியலை தயாரித்தோம். அதில் கிளாமர் க்யூன் சொப்பணசுந்தரியின் பெயரும் இருந்தது. அவர் பழைய நடிகை என்பதால் அதை பயன்படுத்த நினைத்து வைக்கப்பட்டது தான் சொப்பணசுந்தரி காமெடி

    கரகம் கற்ற கோவை சரளா

    கரகம் கற்ற கோவை சரளா

    மாங்குயிலே பூங்குயிலே பாடலில் கோவை சரளாவின் பகுதியை படமாக்க எங்களுக்கு அரை மணி நேரம் தான் இருந்தது. அவர் மற்றொரு ஷுட்டிங்கில் இருந்தார். அவரை வரச்சொல்லி அன்றே அதை எடுத்து முடிக்க நினைத்தோம். மிகக்குறுகிய நேரத்திலேயே அச்சு அசல் கரகாட்ட கலைஞர்களைப் போல் நடன அசைவுகளை கோவை சரளா கற்றுக் கொண்டார்.

    இளையராஜாவுக்கு பிடித்த படம்

    இளையராஜாவுக்கு பிடித்த படம்

    இந்த படத்திற்காக சிரித்ததை போல் இளையராஜா வேறு எதற்காகவும் சிரித்தது இல்லை. அவர் தீம் மியூசிக்கை இசையமைத்ததுமே இந்த படம் அடுத்த கட்டத்திற்கு சென்றது. பாதி நாளிலேயே இந்த படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்தார்.

    வெள்ளிவிழாவிற்கு பஸ் பயணம்

    வெள்ளிவிழாவிற்கு பஸ் பயணம்

    பல தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அதில் இளையராஜாவும் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட பஸ் ஒன்றாக சென்றோம். அப்போது கவுண்டமணி பல கலாட்டாக்களை செய்தார். செந்தில் பாடியதை இளையராஜா மிகவும் ரசித்தார் என்றார் கங்கை அமரன்.

    English summary
    Gangai Amaren's Karagatakkaran turning 23 today, here are some interesting trivia on the film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X