ஆக்ஷன் - காமெடியில் ரஜினிக்கு மிகப் பெரிய வெற்றி தந்த படிக்காதவன்! #Padikkadavan32

By Shankar

படிக்காதவன்... 80களில் வெளியான ரஜினிகாந்தின் மிகப் பெரிய வெற்றிப் படம். அப்போது தொடர்ந்து தமிழிலும் இந்தியிலும் சீரியஸ் ஆக்ஷன் படங்களில் நடித்த ரஜினிக்கு படிக்காதவன் ஒரு வித்தியாசமான படம். ஏன் அவர் ரசிகர்களுக்கும் இது மாறுதலாக அமைந்தது.

1985-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. தம்பிக்கு எந்த ஊரு படத்துக்குப் பிறகு ரஜினியை வைத்து ராஜசேகர் இயக்கிய இந்தப் படத்தில், அம்பிகா, ஜனகராஜ், விஜய் பாபு, தேங்காய் சீனிவாசன், நாகேஷ் என பலர் நடித்திருந்தனர். சிவாஜி கணேசன் சிறப்புத் தோற்றத்தில் வந்தாலும், நீதிமன்றக் காட்சிகளில் பின்னியிருப்பார்.

ரஜினி ரஜினி ரஜினி

ரஜினி ரஜினி ரஜினி

பாசம், காதல், சோகம், அதிரடி என அத்தனை ஏரியாவிலும் அடித்து ஆடியிருப்பார் ரஜினி இந்தப் படத்தில். ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் பாடலை இப்போது பார்த்தாலும் கண்ணோரங்கள் கசிவதைத் தடுக்க முடியாது. ரஜினியின் மின்னல் வேக ஆக்ஷன், ஸ்டைல் காட்சிகள் அன்றைய மாணவ இளைஞர்களுக்கு அத்தனை உற்சாகத்தைத் தந்தன.

ஜனகராஜ்

ஜனகராஜ்

ஜனகராஜின் தங்கச்சிய நாய் கட்ச்சிருச்சிபா... நகைச்சுவை அப்போது தமிழ் சினிமாவுக்கே புதிய ஃப்ளேவர். இப்போதும் சுவாரஸ்யமாகப் பார்க்க வைக்கிறது.

இளையராஜா

இளையராஜா

படத்தின் பெரும் பலம் இளையராஜா. சோடிக் கிளியெங்கே, ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன், ராஜாவுக்கு ராஜா, சொல்லி அடிப்பேனடி, ஒரு கூட்டுக் கிளியாக.. என 5 பாடல்களும் சூப்பர் ஹிட்.

பாக்ஸ் ஆபீஸ்

பாக்ஸ் ஆபீஸ்

இந்தப் படம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் பெரும் சாதனையைப் படைத்தது என்றால் மிகையல்ல. அந்த காலகட்டத்தில், தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்றால் படிக்காதவன்தான். ரஜினியின் மாஸ், ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்ததும் இந்தப் படம்தான்.

200 நாட்கள்

200 நாட்கள்

சென்னை, மதுரையில் இந்தப் படம் 200 நாட்களைத் தாண்டி ஓடியது. ஈஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் என் வீராசாமி (வேலூர்) தயாரித்த இந்தப் படத்தை, அவர்களே சொந்தமாக வெளியிட்டனர்.

32 ஆண்டுகள்

32 ஆண்டுகள்

இந்தப் படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தாலும், படம் சுவாரஸ்யமாக, இனிமையாகவே உள்ளது. அதுதான் அத்தனை பெரிய வெற்றியின் ரகசியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X