அடுத்தடுத்த அதிர்ச்சி.. 35 வயது நடிகை பிரியா காலமானார்.. 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சோகம்

திருவனந்தபுரம்: 3 நாள் முன்பாக மலையாள நடிகை ரென்ஜுசா மேனன் அகால மரணம் அடைந்த நிலையில், 8 மாத கர்ப்பிணியாக இருந்த டாக்டர் பிரியா எனும் சின்னத்திரை நடிகை உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டரும் நடிகையுமான பிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், 35 வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எப்படி இறந்தார் என்பது பேரதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

35 year old 8 month pregnant actress Dr Priya passes away due to cardiac arrest

கொரோனாவுக்கு பிறகு பல இளம் வயது மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

35 வயதில் மாரடைப்பு: 80 வயதானவர்களும் இன்னும் நல்லா ஹெல்தியா இந்த நாட்டில் உள்ள நிலையில், சிலர் 35 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இப்படி பரிதாபமாக குடும்பத்தை நிற்கதியில் விட்டுச் சென்றாரே என பலரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மலையாள டிவி நடிகையான டாக்டர் பிரியா ஏகப்பட்ட தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசியூவில் குழந்தை: 8 மாத குழந்தையை வெளியே எடுத்து மருத்துவர்கள் ஐசியூவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்மா இல்லாமல் அந்த குழந்தை எப்படி வளரும் என்கிற கேள்வியும் எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த குழந்தை வளர வேண்டும் என்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கதறி அழுத கணவர்: திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில், மனைவி பிரியாவை இழந்த வேதனையில் அவரது கணவர் நானா மற்றும் ஒரே மகளை இழந்த பிரியாவின் அம்மாவும் கதறி அழுத காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க வைத்ததாக நடிகர் கிஷோர் சத்யா பிரியாவின் மறைவு குறித்து பதிவிட்டு இருந்தார்.

35 year old 8 month pregnant actress Dr Priya passes away due to cardiac arrest

பிரபலங்கள் இரங்கல்: சின்னத்திரை நடிகை பிரியா 35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி செய்தியை அறிந்த மலையாள சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X