பணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்

By Siva

மும்பை: பணத்திற்காக அரசியல் கட்சிகள் குறித்து தங்களின் சமூக வலைதள கணக்குகளில் போஸ்ட் போட 36 பாலிவுட் பிரபலங்கள் ஒப்புக் கொண்டது தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் செய்தி நிறுவனமான கோப்ரா போஸ்ட்டின் நிருபர்கள் பி.ஆர். நிறுவன ஆட்கள் போன்று நடித்து பாலிவுட் பிரபலங்களை அவர்களின் மேனேஜர்கள் மூலம் அணுகியுள்ளனர். ஆபரேஷன் கரோகி என்ற பெயரில் இது நடத்தப்பட்டுள்ளது.

வரும் லோக் சபா தேர்தலில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போட பணம் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணம்

பணம்

வந்தவர்கள் பத்திரிகையாளர்கள் என்று தெரியாமல் பிரபலங்களும் பணத்தை வாங்கிக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். பணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய 36 பாலிவுட் பிரபலங்கள் ஒப்புக் கொண்டதற்கான வீடியோ ஆதாரம் கோப்ரா போஸ்ட்டிடம் உள்ளது. 4 பிரபலங்கள் மட்டும் தான் விளம்பரம் செய்ய மறுத்துள்ளனர்.

பாடகர்கள்

பாடகர்கள்

கோப்ரா போஸ்ட் ஆட்கள் பல நடிகர்கள், பாடகர்கள், ஸ்டாண்ட் அப் காமெடியன்கள், டான்சர்களை அணுகி கேட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் லட்சக் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்துள்ள பிரபலங்களோ ஒரு போஸ்ட் போட ரூ. 50 லட்சம் வரை கேட்டுள்ளனர். அனைத்து பிரபலங்களுமே பணத்தை ரொக்கமாக தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கருப்பு பணம் பெற அவர்கள் தயங்கவே இல்லை.

ரகசியம்

ரகசியம்

அரசியல் கட்சிகள் குறித்த போஸ்ட்டுகளை தாங்களே போடுவது போன்று போட பிரபலங்கள் ஒப்புக் கொண்டனர். அவர்கள் தங்களின் PAN எண், வங்கி விபரங்களை அளிக்கக் கூட சம்மதித்துள்ளனர். இந்த விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொள்வோம் என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

 நிருபர்கள்

நிருபர்கள்

பாஜக, ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பெயரை அந்த நிருபர்கள் பயன்படுத்தி பிரபலங்களிடம் பேசியுள்ளனர். எந்த கட்சியின் பெயரை கெடுக்கவோ, அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றோ தெரிவிக்கவில்லை. மாறாக பணம் கொடுத்தால் பிரபலங்கள் எதையும் செய்வார்கள் என்பதை நிரூபிக்கவே இப்படி ஒரு ரகசிய விசாரணை நடத்தப்பட்டது என்று கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X