36 வயதில் பிரபல ஆபாச பட நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. என்ன காரணம்?

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆபாச பட நடிகை கேக்னி லின் கார்ட்டர் (Kagney Linn Karter) தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்துள்ளார். அவரது வயது 36. சர்வதேச அளவில் ரசிகர்களை ஈர்த்த அவர் திடீரென இப்படி தற்கொலை செய்துக் கொண்டு இறந்தது ஏன் என்கிற விசாரணை நடைபெற்று வருகிறது.

சினிமாவில் நடிகையாக வலம் வர வேண்டும் என நடிப்பு முதல் பாடல் பாடும் திறமை, நடனம் ஆடுவது என அனைத்தையும் கற்றுக் கொண்டவருக்கு சினிமாவில் பெரிதாக நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

36 old young adult film star Kagney Linn Karter dies by suicide shocks fans

திடீர் தற்கொலை: சன்னி லியோன், மியா கலிஃபா என ஏகப்பட்ட ஆபாச நடிகைகள் உலகம் முழுவதும் பிரபலமாக வலம் வருகின்றனர். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த துறையில் நீடிக்க முடியாமல் ஏகப்பட்ட மன அழுத்த பிரச்சனைகள் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளை சந்திக்கும் அவர்கள் அந்த தொழிலே வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர். அப்படி ஒதுங்கி வாழ்ந்து வந்த நிலையில் தான் தற்போது ஆபாச நடிகை கேக்னி லின் கார்ட்டர் தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்திருக்கிறார்.

ஆபாச நடிகை: 2005ம் ஆண்டுக்கு மேல் ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இமிடியேட்டாக சர்வதேச அளவில் பிரபலமாக தொடங்கினார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், அதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்க தனக்கு ரொம்பவே பிடித்த நடனத்தை நாடியிருக்கிறார். 2019ம் ஆண்டு போல் டான்ஸராக ஒஹியோவில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் இணைந்து நடனம் ஆட ஆரம்பித்தவர் அதன் பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டார் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

36 வயது தான்: இளம் வயதில் இருந்தே ஹாலிவுட் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என ஏகப்பட்ட போராட்டங்களை நடத்தி வாய்ப்புகளை தேடியும் கிடைக்காத நிலையில் தான் இவர் ஆபாச நடிகையாக மாறினார் என்றும் போல் டான்ஸராக வாழ்க்கையை ஓட்டினாலும் அவருக்கு தொடர்ந்து அவரது இருண்ட கடந்த கால வாழ்க்கை மனதில் ரணமாக இருந்து அவரை வாட்டிக் கொண்டே வந்த நிலையில், இந்த திங்கட்கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டு இறந்து விட்டார் என அவரது டீம் அறிவித்துள்ளது. மேலும், அவரது உடலை கைப்பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X