36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்

மும்பை: 2020ம் ஆண்டு உலகத்தையே கொரோனா ஆட்டிப் படைக்கிறது என்றால், பாலிவுட் பிரபலங்களின் தொடர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராயின் 'சராப்ஜித்' படத்தில் நடித்து பிரபலமான நடிகர் ரஞ்சன் ஷேகல் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தி உள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தொடர்ந்து, 36 வயதே ஆன இன்னொரு பாலிவுட் நடிகரின் மரணம் பாலிவுட்டை மீண்டுமொரு முறை துயரக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

பாகங்கள் செயலிழப்பு

பாகங்கள் செயலிழப்பு

தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்து வந்த ரஞ்சன் ஷேகல், சண்டிகரில் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 36. நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவரது உடல் பாகங்கள் திடீரென செயலிழந்து உயிரிழக்க நேரிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் உயிரிழப்பு

மருத்துவமனையில் உயிரிழப்பு

பஞ்சாபி நடிகரான இவர், லாக்டவுன் காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்தவொரு பலனின்றி பரிதாபமாக உயிர் துறந்தார்.

கிரைம் பேட்ரோல்

கிரைம் பேட்ரோல்

பிரபல இந்தி டிவி சிரீயலான கிரைம் பேட்ரோலில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் இவர். பஞ்சாபி நடிகரான இவர், இந்தியில் பல்வேறு சீரியல்களில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். சப்கி லட்லி பெபோ, பாக்யா அண்ட் ரிஷ்டா.காம், ரிஷ்டன் சே பாடி ப்ரதா என பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

ஐஸ்வர்யா ராயுடன்

ஐஸ்வர்யா ராயுடன்

இயக்குநர் ஓமங் குமார் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா ராயின் சர்ப்ஜித் படத்தில் முக்கிய வேடத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் ரஞ்சன் ஷேகல். உண்மை சம்பவத்தை அடிப்படியாக வைத்து உருவான இந்த படத்தில், வயதான தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் உடன்

ஷாருக்கான் உடன்

பஞ்சாபி நடிகரான ரஞ்சன் ஷேகல் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராயின் சர்ப்ஜித் படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் ஜீரோ படத்திலும் நீண்டதொரு ரோலில் நடித்திருந்தார். இளம் வயதில் உடல் நலக் குறைவு காரணமாக ரஞ்சன் உயிரிழந்த செய்தியை அறிந்த பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளம் வயது மரணங்கள்

இளம் வயது மரணங்கள்

கொரோனா ஒரு புறம் மக்களை கொன்று குவித்து வரும் நிலையில், இந்திய துறையில் கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட இளம் வயது மரணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கேன்சர் நோய் காரணமாக 53 வயதில் பிரபல நடிகர் இர்ஃபான் கான் உயிரிழந்தார். உடல் நலக் குறைவால் 36 வயது கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா சமீபத்தில் உயிரிழந்தார். மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது 34 வயதில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். சமீபத்தில் மற்றுமொரு கன்னட டிவி நடிகரும் தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிலையில், இன்னொரு இளம் நடிகரின் மரணம் திரையுலக ரசிகர்களை மொத்தமாகவே சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X