twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடக் கடவுளே.. 36 வயது இளம் நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. என்ன தான் ஆச்சு சினிமா உலகிற்கு?

    |

    டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த 36 வயது இளம் நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரமே பிரபலங்கள் மத்தியில் பீதியை கிளப்பி வரும் நிலையில், மற்றொரு இளம் நடிகையின் மரணம் சினிமா உலகிற்கு சாபக் கேடாக அமைந்துள்ளது.

    சில்க், காமென் ரைடர் ஹிபிக்கி உள்ளிட்ட படங்களில் நடித்த செய் அஷினா உயிரிழந்த சம்பவம் ஜப்பானிய ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை வருத்தமடைய செய்துள்ளது.

     இன்னும் கொஞ்ச நாள்தான்.. பிக்பாஸ் குறித்து டிவிட்டிய விஜய் டிவி.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்! இன்னும் கொஞ்ச நாள்தான்.. பிக்பாஸ் குறித்து டிவிட்டிய விஜய் டிவி.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

    இளம் நடிகை

    இளம் நடிகை

    1983ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி புகுஷிமா மாகாணத்தில் பிறந்தவர். பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் இகரஷி அயா. மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர், 2002ம் ஆண்டு தி டெய்ல் ஆஃப் ஹேப்பினஸ் எனும் டிவி சீரியல் மூலம் நடிக்க வந்தார். இவர் தனது பெயரை Sei Ashina என சினிமாவுக்காக மாற்றிக் கொண்டார்.

    சில்க்

    சில்க்

    கடந்த 2007ம் ஆண்டு இத்தாலிய எழுத்தாளர் அலெசாண்ட்ரோ பாரிக்கோ எழுதிய Silk எனும் நாவல் பெயரிலேயே படமாக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய வெற்றியை நடிகை செய் அஷினாவுக்கு பெற்றுத் தந்தது. மேலும், காமென் ரைடர் ஹிபிக்கி, கமுல் கெய்டன், பெர்ஃபெக்ட் வேர்ல்ட் உள்ளிட்ட படங்கள் பேரும் புகழும் இவருக்கு பெற்றுத் தந்தன.

    தற்கொலை

    தற்கொலை

    இவர் நடிப்பில் உருவாகி உள்ள அல் ஹோகாய் எனும் படம் இந்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் 14ம் தேதி செய் அஷினா அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ள செய்தி தற்போது உலக சினிமா ரசிகர்களை உலுக்கி எடுத்து வருகிறது.

    ஜப்பானிலும்

    ஜப்பானிலும்

    நம்ம நாட்டில் மட்டும் அல்ல, இந்த ஆண்டு ஜப்பானிலும் இது போன்ற சினிமா கலைஞர்களின் தொடர் மரணங்களும் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்து கொண்டே வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் ரியாலிட்டி நடிகை ஹனா கிமுரா ஜூலை மாதம் நடிகர் ஹருமா மியூரா உள்ளிட்டோர் இதே போல தற்கொலை செய்து கொண்டு இளம் வயதில் இறந்து போயுள்ளனர்.

    விசாரணை நடத்தப்படுமா?

    விசாரணை நடத்தப்படுமா?

    பாலிவுட் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கொடுத்த அழுத்தத்தில் பேரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஜப்பான் திரையுலகிலும் இளம் பிரபலங்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், அங்கேயும் இது போன்ற விசாரணையை நடத்த வேண்டும் என ரசிகர்கள், பிரபலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    திரையுலக சோகம்

    திரையுலக சோகம்

    இந்தியாவில் இந்த ஆண்டு ரிஷி கபூர், இர்ஃபான் கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சாச்சி, சிரஞ்சீவி சர்ஜா, சேதுராமன், வடிவேல் பாலாஜி என ஏகப்பட்ட சினிமா கலைஞர்கள் தொடர்ந்து மரணித்து திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளனர். ஹாலிவுட்டிலும் பிளாக்பந்தர் நடிகர் சட்விக் போஸ்மேன் உள்ளிட்டோரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையே இந்த ஆண்டு சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

    English summary
    36 year old young Japanese actress Sei Ashina commits suicide. Her sudden death makes her fans very shocking. So many recent deaths in cinema industry makes this year a worst year to cine industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X