twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்த குடும்ப கப்பல் : சம்சாரம் அது மின்சாரம் படத்திற்கு 36 வயது

    |

    மனிதர்கள் தோல்வியில் இருந்து மீள்வது ஒருவகை என்றால், படுதோல்வியடைந்த ஒரு படத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் இயக்கி வெற்றி காண்பது அசாத்தியங்கள் நிறைந்தது. அப்படியொரு சாதனையை விசு தான் இயக்கிய 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம் மூலம் செய்துக் காட்டினார். குடும்ப பின்னணியில் ரசிகர்களின் மனதை உருகச் செய்த இத்திரைப்படம் உருவான விதமும், அது நிகழ்த்திய சாதனைகளும் மகத்தானது.

    தென்னிந்திய படங்கள்ல நடிக்க ஆர்வமா இருக்கிறேன்.. எந்த பாலிவுட் நாயகி சொல்லியிருக்காங்க தெரியுமா? தென்னிந்திய படங்கள்ல நடிக்க ஆர்வமா இருக்கிறேன்.. எந்த பாலிவுட் நாயகி சொல்லியிருக்காங்க தெரியுமா?

    புதுசு புதுசா யோசிச்சிருக்கார்!

    புதுசு புதுசா யோசிச்சிருக்கார்!

    ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார் விசு. அந்தப் படத்தின் வெற்றிக்கு ஈடாக விசுவிற்கு ஏவிஎம் நிறுவனத்தில் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1975ல் மேடை நாடகமாகவும், அதன் பின்னர் ஒய்.ஜி. மகேந்திரன் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளியான 'உறவுக்கு கை கொடுப்போம்' படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்தார் விசு. அவரின் இந்த முடிவு ஏவிஎம் நிறுவனத்தையே ஆட்டம் காண செய்தது. காரணம் 'உறவுக்கு கை கொடுப்போம்' மிகப் பெரிய தோல்வியை தழுவிய படம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

    கை கொடுத்த நம்பிக்கை

    கை கொடுத்த நம்பிக்கை

    விசுவின் உறுதியான முடிவை பார்த்து ஏவிஎம் நிறுவனம் சம்மதம் தெரிவிக்க, அதன் பின்னர் உருவானது தான் 'சம்சாரம் அது மின்சாரம்.' கதை, திரைக்கதை, காட்சியமைப்பு என அனைத்திலும் தனக்கே உரிய பாணியில் புதுமைகளை புகுத்தினார் விசு. அவரது நம்பிக்கையும் அபார உழைப்பும் 'சம்சாரம் அது மின்சாரம்' படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை பரிசாகக் கொடுத்தது.

    வசனங்களில் வார்த்தை ஜாலம்

    வசனங்களில் வார்த்தை ஜாலம்

    விசுவின் தனி முத்திரையாக பார்க்கப்பட்ட வசனங்கள், 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் பலேஜோராக ஒர்க் அவுட் ஆனது. "இவ என் பொண்ணு பேரு சரோஜினி, கவிக்குயில் சரோஜினி நாயுடு பேரை வச்சிருக்கேன். இது சிதம்பரம், வ.உ.சி நினைவா வச்சிருக்கேன். ரெண்டாவது பையன் சிவா, சுப்ரமணிய சிவாவை ஞாபகப்படுத்துற மாதிரி வச்சிருக்கேன். இதான் என் மூனாவது மகன் பாரதி, இவனுக்கு அந்த மகாகவியோட பேரை ஏன்டா வச்சோம்ன்னு வருத்தப்பட்டு இருக்கேன்" என பாத்திரங்களை ரத்தினச் சுருக்கமாக அறிமுகம் செய்வது என்றைக்கும் மறக்க முடியாது.

    கண்ணம்மா... கம்முன்னு கெட...

    கண்ணம்மா... கம்முன்னு கெட...

    'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் காமெடி காட்சிகள் இல்லையென்ற காரணத்தால் மனோரமாவின் பாத்திரம் இணைக்கப்பட்டதாக, விசு பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ஒருவேளை அப்படி சேர்க்காம;ல் போயிருந்தால் "கண்ணம்மா... கம்முன்னு கெட" என்ற வசனம் பலருக்கும் தெரியாமல் போயிருக்கும். மனோரமாவின் அட்டகாசமான நடிப்பிற்கு இந்தப் படமும் ஒரு உதாரணமாக அமைந்தது.

    முதல் தங்கத் தாமரை விருது!

    முதல் தங்கத் தாமரை விருது!

    ரசிகர்களால் குடும்ப காவியம் என கொண்டாடப்பட்ட 'சம்சாரம் அது மின்சாரம்' விசுவிற்கு மிகப் பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் மத்திய அரசின் தங்கத் தாமரை விருதையும் வென்று தமிழ் சினிமாவுலகிற்கே பெருமை சேர்த்தது. ஏனெனில் தமிழில் முதன்முறையாக தங்கத் தாமரை விருது 'சம்சாரம் அது மின்சாரம்' படத்திற்கே கிடைத்தது. இன்றும் குடும்பங்கள் கொண்டாடும் படங்களின் வரிசையில் 'சம்சாரம் அது மின்சாரம்' கண்டிப்பாக இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

    English summary
    36 Years of Samsaram Athu Minsaram.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X