twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஞ்சான், 49 ஓ: ஆகஸ்ட்டில் ரிலீசாக காத்திருக்கும் 37 தமிழ் படங்கள்!

    By Veera Kumar
    |

    சென்னை: சமீப காலமாக தமிழில் அதிக அளவில் படங்கள் தயாராகி வருகின்றன. எனவே தயாரான படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் அஞ்சான் உட்பட 37 படங்கள் ரிலீசாக காத்திருப்பதாக கூறுகிறது தமிழ் பட உலகம். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இப்போதுதான் இவ்வளவு அதிக படங்கள் வெளியாவதாக கூறப்படுகிறது.

    வி.ஐ.பி,, சதுரங்க வேட்டை

    வி.ஐ.பி,, சதுரங்க வேட்டை

    இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக, ஆகஸ்ட் மாதத்தில் 37 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. கடந்த 18ம் தேதி வெளியான வேலையில்லா பட்டதாரி படமும், சதுரங்க வேட்டையும் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் 25ம் தேதி வெளியாக வேண்டிய சில படங்கள் அடுத்த மாதத்துக்குத் தள்ளிப்போயுள்ளன. அவற்றையும் சேர்ந்து மொத்தம் 37 படங்கள் வெளியாக உள்ளன.

    அஞ்சான், 49 ஓ

    அஞ்சான், 49 ஓ

    அஞ்சான், காவியத்தலைவன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், வானவராயன் வல்லவராயன், கவுண்டமனி நடித்துள்ள 49 ஓ, கன்னக்கோல், சண்டியர், சரபம், ஜிகிர்தண்டா, பட்டைய கிளப்பணும் பாண்டியா, சிநேகாவின் காதலர்கள், ஆள், பூலோகம், பரணி, ஆ, தகடு தகடு, மொசக்குட்டி, சேர்ந்து போலாமா, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, வாலிப ராஜா, அரண்மனை, வாலு, மெட்ராஸ், கங்காரு, புலிப்பார்வை.

    காமராஜர்

    காமராஜர்

    மேலும், இரும்புக்குதிரை, சலீம், காதலைத்தவிர வேறொன்றுமில்லை, வெண்நிலா வீடு, சோன்பப்டி, திருடன் போலீஸ், தொட்டால் தொடரும், பூலோகம், கடவுள் பாதி மிருகம் பாதி, காமராஜர் மற்றும் ஆங்கிலப் படங்களான ஹெர்குலீஸ் ரிட்டர்ன், தி எக்ஸ்பெண்டபிள் 3 ஆகிய 37 படங்கள் ஆகஸ்ட் மாத ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இன்னும் சில டப்பிங் படங்களும் இந்த லிஸ்டில் சேரும் என்றும் கூறப்படுகிறது.

    தியேட்டர் கிடைக்குமா?

    தியேட்டர் கிடைக்குமா?

    அடுத்த மாதம் பெரிய படமான அஞ்சான் ரிலீஸ் ஆவதால் அதற்கு முன்போ, பின்போ படத்தை ரிலீஸ் செய்ய பலர் நினைக்கின்றனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இரண்டு படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை இருக்கிறது. அதனால் 37 படங்கள் ரிலீஸ் முயற்சியில் இருந்தாலும் அவ்வளவும் ரிலீஸ் ஆகும் வாய்ப்பில்லை என்று திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    37 Tamil films set to release in the month of Augest, industry sources said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X