twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்ணே கலைமானே... காலம் கடந்தும் கலங்கடிக்கும் மூன்றாம் பிறை!

    |

    சென்னை: காதல் ..முதலில் பிரமிக்க வைத்து, பின் மாயவலையில் சிக்க வைக்கும் ஒரு பைத்தியக்காரத்தனம் தான் காதல். இப்படிப்பட்ட காதலை கொண்டாட எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும். காதலை அழகாக வருடி தாலாட்டிய திரைப்படம் தான் மூன்றாம் பிறை.

    இத்திரைப்படம் வெளியாகி நேற்றோடு 38 ஆண்டு கடந்து விட்டாலும் இந்த படத்தின் மீதான தாக்கம் குறையவில்லை.

    7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!

    காலத்தால் மறையாத காதல் காவியம் குறித்து சத்திய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் இன்று என மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளது.

     அகவை 38

    அகவை 38

    இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தி1982ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்திற்கு நேற்றோடு அகவை 38 ஆகிறது. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் அவர் அவர் பங்குக்கு சிறப்பாக நடித்து அசத்தி இருப்பார்கள்.

     மெல்லிய காதல்

    மெல்லிய காதல்

    மனமுதிர்ச்சி அடைந்த அப்பாவி இளைஞனுக்கும், குழந்தையாக மாறியிருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பூக்கும் அற்புதமான காதலும், மெல்லிய உறவும், அவள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், இளைஞனின் நிலையை பல வலிகளில் கூறியுள்ளது இப்படம். சீனுவாக கமலும், விஜியாக ஸ்ரீதேவியும் வாழ்த்து காட்டி இருப்பார்கள்.

     300நாட்களுக்கு மேல்

    300நாட்களுக்கு மேல்

    திரையரங்கில் கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய காதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, கண்ணதாசனின் பாடல் வரிகளில் இளையராஜாவின் இசை இன்னும் இப்படத்திற்கு மெருகூட்டியது.

     ஆல் டைம் பேவரைட்

    ஆல் டைம் பேவரைட்

    சில்க் கமல்ஹாசன் நடனமாடிய பொன்மேனி உருகுதே வேற லெவல் டிரெண்டானது. இன்று வரை இந்த பாடலை அடித்துக்கொள்ள வேறு பாடல் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பூங்காற்று புதிரானது, கண்ணே கலைமானே போன்ற பாடல்களில் இசைஞானி இளையராஜா இன்றளவும் வான் அளவு உயர்ந்து நிற்கிறார். இன்னும் பல காதலர்களின் ரிங்டோனாகவும், வாட்ஸ் அப் ஸ்டேடஸ்டாகவும் இந்த பாடல்கள் உலவி வருகின்றன.

     2 தேசியவிருதுகள்

    2 தேசியவிருதுகள்

    கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை பாலுமகேந்திராவும் பெற்றனர். மேலும், தென்னிந்திய திரைப்பட விருது, தமிழக அரசின் விருது என பல விருதுகளை வாரிக்குவித்தது.

     இந்தியில் இயக்கினார்

    இந்தியில் இயக்கினார்

    இப்படம் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்தது. வசந்த கோகிலா என்ற பெயரில் தெலுங்கில், மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கிலும் ஹிட்டடித்தது. மேலும் இந்தியில் பாலுமகேந்திராவே, கமல், ஸ்ரீதேவியை வைத்து சத்மா என்ற தலைப்பில் ஹிந்தியில் இயக்கினார்.

     வானில் ஜொலிக்கும்

    வானில் ஜொலிக்கும்

    38 ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் இப்படம் குறித்து, சத்திய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 38 ஆண்டுகளுக்கு முன் இன்று என தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளது. காதல் உள்ள வரை காதலர்கள் உள்ள வரை இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த படம் வானில் பிறையாக ஜொலித்துக்கொண்டே இருக்கும்.

    Read more about: moondram pirai
    English summary
    38 years of Moondram Pirai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X