ஓவர் பொஸஸிவ்னஸ் வேண்டாம் பிரியங்கா… அதுக்கு அவன் வொர்த் இல்ல… நெட்டிசன்ஸ் அட்வைஸ் !
சென்னை : பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் விருது நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அவ்வப்போது வழக்கமான மோதல்கள் இருந்துவரும் நிலையில், நிரூப்பிற்கு எதிராக மற்ற போட்டியாளர்கள் குரல் எழுப்புகின்றனர்.
ஐக்கி பெரியுடன் நிரூப் நட்பாக பழகுவதை பார்த்து காண்டான பிரியங்கா, நிரூப்பிடம் கேள்வி கேட்க, இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் ப்ரியங்கா, தனக்கு பொஸஸிவ்னஸ் வந்துவிட்டதாக புலம்புகிறார்.
இதனால், நெட்டிசன்ஸ் பலர் பிரியங்காவிற்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

ஏன் இப்படி
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், ஒன்னு மட்டும் புரியவே இல்ல பிரியங்கா, ஏன் இவன் கிட்ட இவ்வளவு பிரண்ட்ஸிப் வச்சி இருக்கானு, ஆனா நிரூப் அவன் இவளை கண்டுகிட்ட மாதிரியே தெரியல இருந்தாலும் மறுபடி மறுபடி அவனை விட்டு விளகுற மாதிரி தெரியல, இவ்வளவு போல்ட் ஆனா பொண்ணு இது கூட தெரியாம ஏன் இவ்வளவு அட்டச்மெண்ட் இவன் கூட என பதிவிட்டுள்ளார்.

நிரூப் வொர்த் இல்ல
மற்றொரு நெட்டிசன், பிரியங்கா சத்தியமா, நிரூப் எல்லாம் வொர்த் இல்ல,அவனும் அவ வார்த்தையும், நீங்கள் சிறந்தவர், அந்த பையனைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். என பதிவிட்டுள்ளார்.

தனியா விளையாடு
பிரியங்காவின் தீவிர ரசிகர் ஒருவர், தனியா விளையாடு யாரையும் நீ ட்ரட் பண்ண வேண்டாம். அந்த, அந்த அபிஷேக்கிடம் நிரூப்,பிரியங்கா பத்தி சொன்னத குறும்படமா போட்டு காமிங்க.. என பதிவிட்டுள்ளார்.

சண்டைக்கு இதுதான் காரணம்
மற்றொரு நெட்டிசன், இதைத்தான் நான் ஸ்டார்டிங்'ல இருந்தே சொல்றேன், பிரியங்காவுக்கு நிரூப்னா ரொம்ப பிடிகும், சோ அவன் அவளுக்கு ப்ரண்டா பிரியாரிட்டி கொடுக்கணம்னு பாக்குற. ஆனால் நிரூப் அப்படி இல்லை, அவனுக்கு நட்பு வேற கேம் வேற.. இது தான் அவங்களுக்குள்ள வர சண்டைக்கு முக்கிய காரணம் என பகிர்ந்துள்ளார்.

நீங்களாக இருங்கள்
மற்றொருவரும் , பிரியங்கா நீங்க நிரூப்பை விட்டுட்டு வந்தா தான் உங்களுக்கு நல்லது. அபிஷேக் இருக்கும் வரை நீ வீட்டில் நன்றாக இல்லை.அதன் பிறகு நன்றாக விளையாடுகிறாய்.உன் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. கடந்த சீசனில் அர்ச்சனா செய்தது போல் லூஸ் செய்ய வேண்டாம். பிரியங்கா நீங்களாக இருங்கள். என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











