இந்தியாவின் புதிய 'காமசுந்தரி' ஷெர்லின் சோப்ரா... முதல் 'படம்' ரிலீஸ்!

By Sudha

மும்பை: ருபேஷ் பால் இயக்கத்தில் உருவாகப் போகும் புதிய காமசூத்ரா படத்தின் முதல் ஸ்டில் வெளியாகியுள்ளது. 3டி படமாக உருவாகும் இதில் காமசுந்தரியாக நடிக்கப் போவது ப்ளே கேர்ள் ஷெர்லின் சோப்ரா.

சர்வதேச சந்தையைக் குறி வைத்து

சர்வதேச சந்தையைக் குறி வைத்து

சர்வதேச சினிமா சந்தையைக் குறி வைத்து இந்தப் படத்தை உருவாக்கப் போகிறாராம் ருபேஷ் பால்.

ஆங்கிலத்தில் மட்டும்

ஆங்கிலத்தில் மட்டும்

ஆங்கிலத்தில் இந்தப் படத்தை உருவாக்கவிருக்கும் ருபேஷ், நாயகியாக ஷெர்லின் சோப்ரா எனப்படும் மோனா சோப்ராவை புக் செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் 'ப்ளே கேர்ள்'

இந்தியாவின் முதல் 'ப்ளே கேர்ள்'

ப்ளே பாய் பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்த முதல் பெண் என்ற பெருமையைக் கொண்டவர் ஷெர்லின். கவர்ச்சிக்கும், நிர்வாணத்திற்கும் பெயர் போனவர். பாடகியாக, மாடலாக, நடிகையாக வலம் வருபவர்.

ஆண்களும் இருக்கிறார்கள்

ஆண்களும் இருக்கிறார்கள்

இப்படத்தில் ஷெர்லின் காட்டப் போகும் கவர்ச்சிதான் பிரதானமாக இருக்கும் என்றாலும் கூட நசிருதீன் ஷா, மிலிந்த் சோமன், ரந்தீப் ஹூடா ஆகியோரும் நடிக்கவுள்ளனராம்.

அதென்ன காமசூத்ரா?

அதென்ன காமசூத்ரா?

பெண்களை 30 வகையாகப் பிரித்து ஒவ்வொருவரையும் எப்படிக் கவர வேண்டும், எப்படி திருப்திப்படுத்த வேண்டும், எப்படி அணுகினால், செயல்பட்டால் அவர்களைத் திருப்திப்படுத்த முடியும் என்பதைச் சொல்லும் சூத்திரம்தான் இந்த காமசூத்திரா. 14ம் நூற்றாண்டில் வாத்ஸாயனர் எழுதியது இந்த காமசூத்திரம்.

ஆனால், இது அனங்க ரங்கா

ஆனால், இது அனங்க ரங்கா

ஆனால் அனங்க ரங்கா என்ற இன்னொரு காமசூத்திர நூலை அடிப்படையாக வைத்து தனது படத்தை எடுக்கப் போகிறாராம் ருபேஷ் பால்.

அனங்க ரங்கா என்ன சொல்கிறது?

அனங்க ரங்கா என்ன சொல்கிறது?

அதாவது 30 வகையான பெண்களைத் தேடிப் போவதை விட தனது மனைவியிடத்திலேயே 30 வகையான பெண்களின் குணங்களையும் எப்படி கண்டுணர்ந்து இன்புறுவது என்று கூறுகிறதாம் அனங்க ரங்கா.

ஆரம்பிச்சுட்டாங்களாம்

ஆரம்பிச்சுட்டாங்களாம்

படப்பிடிப்பை ஏற்கனவே ஆரம்பித்து விட்டாராம் ருபேஷ் பால். குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வைத்து நடத்தவிருக்கிறாராம்.

முதல் படம் வெளியானது

முதல் படம் வெளியானது

காமசூத்ரா படத்தில் ஷெர்லின் சோப்ரா காட்சி தரும் ஒரு ஸ்டில்லை மட்டும் தற்போது ருபேஷ் பால் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய பாரம்பரிய உடையில் அமர்ந்திருக்கிறார் ஷெர்லின். கையில் தீயை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்...(காமத்தீயோ...??)

இந்தியாவில் கஷ்டம்தான்

இந்தியாவில் கஷ்டம்தான்

இப்படத்தை இந்தியாவில் திரையிடுவது சற்று கடினம் என்று ருபேஷ் பால் கூறுகிறார். காரணம், படத்தின் கதையும், அதன் காட்சிகளும் அப்படி இருக்கிறதாம். சர்வதேச திரைச் சந்தையில் இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

கண்ணுக்கு 'கிட்டக்க' வந்து ஷெர்லின் காட்டப் போகும் 'காட்சி'களைக் காண அமெரிக்காவுக்குத்தான் போக வேண்டும் போல...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X