கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வரும் மீகாமன், கயல், வெள்ளக்கார துரை, கப்பல்
இன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி மீகாமன், கயல், வெள்ளக்கார துரை, கப்பல் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
நான்குமே குறிப்பிடத்தக்க படங்கள் என்பதால் கணிசமான அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீகாமன்
ஆர்யா - ஹன்சிகா நடித்துள்ள மீகாமன் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது.

கயல்
மீடியாவில் அதிக பப்ளிசிட்டி தரப்பட்டுள்ள படம் இந்த கயல். பிரபு சாலமன் இயக்கத்தில், டி இமான் இசையில் வெளியாகிறது, புதுமுகங்கள் நடித்துள்ள படம் இது.

கப்பல்
ஷங்கர் வழங்கும் இந்தப் படத்துக்கும் விளம்பரங்களுக்குப் பஞ்சமில்லை. வைபவ், சோனா பாஜ்வா நடித்துள்ளனர். கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இசை நடராஜன் சங்கரன்.

வெள்ளக்கார துரை
தாராளமான நகைச்சுவைக்கு கியாரண்டி தரும் இயக்குநர் எழிலின் இயக்கத்தில் வந்துள்ள படம் வெள்ளக்கார துரை. இந்தப் படத்துக்குதான் அதிக அரங்குகளும் கிடைத்துள்ளன. விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











