வந்ததும் வராததுமா தண்டனையில் சிக்கிய 4 போட்டியாளர்கள்..முதல்நாளே இப்படி செய்யலாமா பிக்பாஸ்!

சென்னை : பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக நான்கு போட்டியாளர்களை வீட்டை விட்டு கொட்டும் மழையில் நனைந்தபடி இருந்தனர்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று ஆடல், பாடல் என மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

ஜிபி முத்து, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன்,ஆயிஷா, ராம், குயின்ஸ், விஜே கதிரவன், மெட்லி ஒலி சாந்தி, ஷிவின் கணேஷன், தனலட்சுமி, விஜே மகேஷ்வரி, அமுதவாணன், விக்ரமன், மாடல் நிவாஷினி என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குறைவாக கவர்ந்த நபர்

குறைவாக கவர்ந்த நபர்

பிக் பாஸ் வழக்கமாக கொளுத்திப்போடும் வேலையை கொஞ்ச நாள் கழித்துத்தான் பிக்பாஸ் பார்ப்பார் ஆனால், அந்த வேலையை டிஆர்பியை எகுற வைக்க முதல்நாளே தொடங்கிவிட்டார். அதாவது ஹவுஸ் மேட்ஸ்களிடம் உங்களை குறைவாக கவர்ந்த நபர் யார் என்று கேள்வியை கேட்டு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தினார்.

4 பேருக்கு தண்டனை

4 பேருக்கு தண்டனை

இதையடுத்து போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்த அமைதியாக இருந்த போட்டியாளர்களின் பெயரை கூறினர். இதில்,விக்ரமன்,ஜனனி, நிவாஷினி, குயின்ஸி ஆகியோரை அனைவரும் சேர்ந்து கூறினார். இதையடுத்து, இந்த போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் நான்கு பேரும் வீட்டைவிட்டு வெளியில் இருக்கும்படி பிக்பாஸ் கூறினார்.

கொட்டும் மழையில்

கொட்டும் மழையில்

அவர்கள் நான்கு பேருக்கும் பெட்ஷிட் மட்டுமே கொடுக்கப்பட்டது. இரவு முழுவதும் மழையிலும் கொசுக்கடியில் அவர்கள் சிரமப்பட்டனர். மறுநாள் விடிந்ததும் பிக் பாஸின் கட்டளையை மீறி உள்ளே சென்று சாப்பிட்ட ஜனனியை பிக் பாஸ் விதியை மீறிவிட்டதாக கூறினார். மேலும் நான்கு பேரும் நேரடியாக நாமினேஷனுக்கு செல்வீர்கள் என்று ஒரு அதட்டல் போட்டார் பிக்பாஸ்.

டார்கெட் ஜனனியா?

டார்கெட் ஜனனியா?

இப்படி இருக்க இப்பொழுது இந்த வார டார்கெட் ஜனனி என்று மட்டும் தெரிகிறது. இனி வரும் நாட்களில் சண்டைக்களமாக பிக் பாஸ் வீடு மாறும் என்பது உறுதி. முதல் நாளே இப்படி ஆரம்பிச்சிடீங்களா பிக் பாஸ் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதனை வைத்தே இந்த வாரத்தில் கண்டிப்பாக சண்டை வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X