தமிழகம் முழுவதும் கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டம் - இன்று நிறைவு
சென்னை: கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி தமிழகம் முழுதும் நான்கு தினங்கள் பசுமைத் தொடர் ஓட்டம நடந்தது.
இயற்கையைப் போற்றி, மரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த தொடர் ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

18-ம் தேதி
கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர்கள் சார்பில் இந்த விழிப்புணர்வு தொடர் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 18-ம் தேதி காலை நெல்லையில் தொடங்கிய இந்த தொடர் ஓட்டம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, வழியாக சென்னை வந்தடைந்தது.

உற்சாகம்
ஒவ்வொரு மாவட்டத்துக்குள் கோச்சடையான் பதாகையைப் பிடித்தபடி, இயற்கையைப் போற்றியும், மரங்கள் வளர்ப்பதன் அருமைகளைச் சொல்லும் கோஷங்களை எழுப்பியபடி ரசிகர்கள் நுழைந்தபோது, அவர்கள் உற்சாகத்துடன் எதிர்கொண்டனர் மற்ற மாவட்ட ரசிகர்கள்.

ஆரத்தி
சில ரசிகர்கள் உணர்ச்சி மேலீட்டில், கோச்சடையான் பேனர்களுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினர்.

முதல் முறை
இதுவரை எந்த ரஜினி படத்துக்கும் இந்த மாதிரி ஒரு சிறப்பான, நல்ல நோக்கத்துடன் கூடிய பசுமைத் தொடர் ஓட்ட நிகழ்ச்சி நடந்ததில்லை. சில ஊர்களில் ரசிகர்கள் அல்லாத பலர் இந்த தொடர் ஓட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வெயிலென்றும் பாராமல்
கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றது பலரையும் நெகிழ வைத்தது.


Click it and Unblock the Notifications











