Just In
- 4 min ago
செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
- 34 min ago
ஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்!
- 1 hr ago
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
- 1 hr ago
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா? நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்!
Don't Miss!
- News
நான் வர மாட்டேன்.. என்ன மல்லாடி இப்படி அதிரடியா அறிவிச்சுட்டாரு!
- Sports
கண்ணுல திமிரு.. விரல் எலும்பில் வேகமாக பட்ட பவுன்சர்.. வலியோடு எழுந்து நின்ற "சே" புஜாரா.. தரம்!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Lifestyle
இந்த 5 காய்கறிகள் உங்க உடல் எடையை குறைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமாம்...!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லோகேஷ் மட்டுமில்ல.. மாஸ்டர் படத்துக்கு எத்தனை இயக்குநர்கள் வொர்க் பண்ணியிருக்காங்க தெரியுமா?
சென்னை: ஊரே ஒரே மாஸ்டர் பத்திய பேச்சாத்தான் இருக்கு. இன்னைக்கு சாயங்காலம் நடக்கப் போகுற மாஸ்டர் ஆடியோ லாஞ்சுக்குத்தான் அனைவரும் வெயிட்டிங்.
மாஸ்டர் வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை கேட்கவே பலரும் ஆவலோடு இருக்கின்றனர்.
மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில், வேறு சில இயக்குநர்களும் தளபதி விஜய்க்காக என்ன என்ன வேலை செஞ்சிருக்காங்கன்னு இப்போ பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படம் குறித்து வரும் ஒவ்வொரு அப்டேட்டுக்கும், இந்த மனுஷனைத்தான் பாராட்ட வேண்டும். தளபதி ரசிகர்களின் வேவ் லெந்தை அவ்வளவு கச்சிதமாக பிடித்து, அடுத்த அடுத்த சர்ப்ரைஸ்களை இறக்கி வருகிறார். தளபதி விஜய்யை ரசிச்சு ரசிச்சு ஒவ்வொரு பிரேமிலும் செதுக்கி உள்ளார் என்பது, லிரிக் வீடியோவில் வரும் புகைப்படங்கள் மூலமாகவே வெளிச்சப்படுகிறது.

ஆடை இயக்குநர்
மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அமலா பால் நடிப்பில் ஆடை எனும் படத்தை இயக்கி, இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவர் நினைத்திருந்தால், தனியாகவே அடுத்த ஒரு பெரிய நடிகரை வைத்து படம் இயக்கி இருக்கலாம். ஆனால், தளபதிக்கு ஒரு படம் பண்ணலாம், திரைக்கதையில் வொர்க் பண்ண வறியா என லோகேஷ் அழைத்ததும், உடனே ஓகே சொல்லி தீயாய் வேலை செய்து வருகிறார்.

கனா இயக்குநர்
ராஜா ராணி, மான் கராத்தே படங்களில் காமெடி நடிகராக வலம் வந்த அருண்ராஜா காமராஜ், கபாலியில் ரஜினிக்கு நெருப்புடா பாடலை எழுதி, பாடி தன்னுடைய திறமையை தமிழ் சினிமாவுக்கு காட்டியவர். அதைவிட ஒரு படி மேலே சென்று, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மூலமாக நிஜமாகவே சிக்ஸர் அடித்த அருண்ராஜா, குட்டி ஸ்டோரி பாடலுக்கு எழுதியுள்ள வரிகள் மாஸ்டர் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

லவ்வர் பாய்
போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், இப்போ காத்து வாக்குல ரெண்டு காதல் படம் என படுபிசியாக இருக்கும் விக்னேஷ் சிவன், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். தளபதி விஜய், மாளவிகா மோகனன் ரொமான்ஸ் செய்யும் அந்த கண்ண பார்த்தாக்கா பாடலை எழுதியுள்ளார். மேலும், க்விட் பண்ணுடா என்ற பாடலையும் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

எல்லாம் யாருக்காக
லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், அருண் ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் என மொத்தம் 4 இயக்குநர்கள், அனிருத் இசையமைப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் ஆல்பத்தில், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்பட மூன்று இசையமைப்பாளர்கள் என இத்தனை பேரும் தளபதி விஜய்க்காக ஈகோ இல்லாமல் வொர்க் பண்ணியிருப்பது கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.